22.7 C
Dubai
October 23, 2020
UAE Tamil Web

அபுதாபி: மது வாங்க இனி உரிமம் பெறத் தேவையில்லை – புதிய வழிமுறைகளை வெளியிட்டது அரசு..!

liqour

அபுதாபியில் குடியிருப்பாளர்கள் மது வாங்குவதற்கு உரிமம் பெறவேண்டும் என்ற நடைமுறையை ரத்து செய்திருப்பதாக அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை தெரிவித்திருக்கிறது. கடந்த வாரத்தில் இதுகுறித்து மது விற்பனையகங்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,” தனிநபருக்கான மது உரிமத்தினை ரத்து செய்திருப்பதை உங்களுக்குத் தெரிவிக்க விழைகிறோம். குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் உரிமம் பெற்ற மது விற்பனை நிலையங்களில் மதுவினை வாங்கவும் அருந்தவும் அனுமதிக்கப்படுகிறார்கள். கீழ்க்கண்ட கட்டுப்பாடுகளைப் பின்பற்றி சுற்றுலா தலங்கள், ஹோட்டல்கள், கிளப், தனியார் இல்லங்கள் ஆகியவற்றில் மதுவினை மக்கள் அருந்தலாம்.

  • மது அருந்துபவர் 21 வயதிற்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும்.
  • மதுவினை அருந்த மட்டுமே பெறவேண்டும். மீண்டும் விற்பனை செய்வது, பதுக்கி வைப்பது கூடாது.
  • தனியார் இல்லங்கள், உரிமம் பெற்ற பகுதிகளில் மட்டுமே மது அருந்தப்பட வேண்டும்.

அபராதம்

அபுதாபி கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை வெளியிட்டுள்ள இந்தப் புதிய மதுக்கொள்கையினைப் பின்பற்றாதவர்களுக்கு கீழ்க்கண்ட முறையில் அபராதமானது விதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

21 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மதுவினை விற்றால் முதல் முறை 40,000 திர்ஹம்ஸ் அபராதமும் இரண்டாம் முறை 60,000 திர்ஹம்ஸ் அபராதமும் மூன்றாம் முறை 80,000 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்படும். நான்காவது முறையும் இதே தவறைச் செய்தால் ஒவ்வொரு முறையும் 80,000 திர்ஹம்ஸ் அபராதமாக விதிக்கப்படும்.

போதிய உரிமம் இல்லாமல் மதுவினை விற்பனை அல்லது மீள் விற்பனை (வாங்கி விற்பது) செய்தால் முதல் முறை எச்சரிக்கை அளிக்கப்படும். இரண்டாம் முறை 10,000 திர்ஹம்ஸ் அபராதமும் மூன்றாம் முறை 30,000 திர்ஹம்ஸ் அபராதமும் விதிக்கப்படும். நான்காவது முறையும் இதே தவறைச் செய்தால் 40,000 திர்ஹம்ஸ் அபராதமாக விதிக்கப்படும்.

பானங்கள் அல்லது மதுபானங்களைக் கடத்துதல், அமீரகத்திற்கு வெளியே இருந்து உரிமம் பெறாமல் மதுபானங்களை இறக்குமதி செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபடுவோர் நேரடியாக நீதிமன்ற விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுவர்.

மதுபானங்களை உருவாக்கும் நபர்கள் நேரடியாக நீதிமன்ற குற்ற விசாரணைக்கு ஆட்படுத்தப்படுவர்.

துபாயில் என்ன நிலை?

துபாயைப் பொறுத்தவரையில் குடியிருப்பாளர்கள் மது அருந்தவோ வாங்கவோ உரிமம் பெற்றிருக்க வேண்டும் என்ற நடைமுறை தொடர்கிறது. சுற்றுலாவாசிகளுக்கு தற்காலிக உரிமம் வழங்கப்படுகிறது,

உணவகங்கள் மற்றும் பார்களில் உரிமத்தினை காண்பிக்கத் தேவையில்லை.

குடியிருப்பாளர் உரிமம் பெற, அவருடைய முதலாளியிடமிருந்து தடையில்லா சான்றிதழ் பெற்று அதனை சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறையை துபாய் அரசு விலக்கியிருக்கிறது.

குடியிருப்பாளர்கள் மது உரிமம் பெற  தங்களது எமிரேட்ஸ் ஐடி நகலின் மூலமாக, படிவத்தினைப் பெற்று நிரப்பி 270 திர்ஹம்ஸ் பணம் செலுத்தினால் போதும்.

அதேபோல, சுற்றுலாவாசிகள் மது விற்பனை நிலையங்களில் தங்களது பாஸ்போர்ட் மற்றும் விசா முத்திரையை காண்பித்தால் போதுமானது.



error: Alert: Content is protected !!