UAE Tamil Web

அபுதாபிக்குள் நுழைவதற்கான புதிய வழிமுறைகளை வெளியிட்டது அரசு – இன்றுமுதல் அமல்..!

Abudhabi

பிற எமிரேட்களில் இருந்து அபுதாபி வருவோருக்கான விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவந்திருப்பதாக அபுதாபி அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தப் புதுப்பிக்கப்பட்ட வழிமுறைகள் இன்று முதல் (பிப்ரவரி 1) அமலுக்கு வர இருக்கிறது. இனி விதிமுறைகளில் கொண்டுவரப்பட்ட மாற்றம் குறித்துக் காண்போம்.

முன்னதாக அபுதாபிக்கு செல்பவர் தன்னுடைய கொரோனா நெகட்டிவ் முடிவை குறுஞ்செய்தி மூலமாக காண்பித்தாலே போதுமானது. ஆனால் தற்போது கொரோனா நெகட்டிவ் முடிவை ALHOSN அப்ளிகேஷனில் காண்பிக்கவேண்டும். முன்னதாக ALHOSN அப்ளிகேஷனை தரவிக்கிக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது. ஆனால் அது தற்போது கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது.

இந்த ஆப் மூலமாக கொரோனாவிற்கான சோதனை முடிவுகள் மட்டுமல்லாது ஒரு நபர் வெளிநாட்டிலிருந்து அமீரக விமான நிலையத்திற்கு வந்தடைந்த நாட்களின் எண்ணிக்கையையும் தெரிந்துகொள்ளலாம்.

அபுதாபி எல்லைப் பகுதியில் உள்ள அதிகாரிகள் ஒருவரது கொரோனா பரிசோதனை முடிவுகளைக் கண்ட பின்னர், அந்த நபர் எவ்வாறு குவாரண்டைன் செய்துகொள்ள வேண்டும் என்பதனை முடிவு செய்ய இந்த அப்ளிகேஷன் தகவல்கள் உறுதுணையாக இருக்கும்.

DPI முடிவுகளை சமர்பிக்கலாமா?

அபுதாபிக்குள் நுழைய ஒரு நபர் DPI பரிசோதனை மேற்கொண்டு அவருக்கு நெகட்டிவ் ரிசல்ட் கிடைக்கிறது எனில், அம்முடிவு வெளிவந்த அடுத்த 24 மணி நேரத்திற்குள் அவர் அபுதாபிக்குள் நுழைந்திருக்க வேண்டும். அதேசமயத்தில் இரண்டுமுறை அபுதாபிக்குள் நுழைய DPI பரிசோதனை முடிவை சமர்ப்பிக்க இயலாது.

அதேபோல, ஒருவர் DPI சோதனை முடிவை சமர்ப்பித்து அபுதாபிக்குள் நுழைகிறார். அவர் 48 மணி நேரத்திற்கும் அதிகமான காலம் அபுதாபியில் தங்குவதாக இருந்தால் மூன்றாவது மற்றும் ஏழாவது நாளில் அவர் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்.

PCR டெஸ்ட்

அபுதாபிக்குள் நுழைய PCR பரிசோதனை முடிவைப் பெற்றவர்கள் அடுத்த 48 மணி நேரத்திற்குள் அபுதாபிக்குள் நுழைய வேண்டும். அவர்கள் அபுதாபிக்குள் நுழைந்ததிலிருந்து 4 மற்றும் 8 ஆம் நாள் மீண்டும் PCR பரிசோதனை எடுத்துகொள்ள வேண்டும்.

யாருக்கெல்லாம் விதிவிலக்கு?

அமீரகத்தில் நடைபெற்றுவரும் கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையின் தன்னார்வலர்கள் மற்றும் அமீரக தேசிய தடுப்பூசித் திட்டம் மூலம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இந்தப் புதிய நடைமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அவர்கள் தங்களது ALHOSN அப்ளிகேஷனில் Gold star அல்லது E என்ற அந்தஸ்தைப் பெற்றிருத்தல் வேண்டும். கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற கொரோனா தடுப்பூசி மூன்றாம் கட்ட பரிசோதனையின் தன்னார்வலர்கள் மற்றும் அமீரக தேசிய தடுப்பூசித் திட்டம் மூலம் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களுக்கு இந்த ஐகான் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Abudhabi
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap