அபுதாபி: அல் தஃப்ரா பிராந்தியத்தில் அல் ருவைஸ் கடற்கரையின் சர் பனி யாஸ் பாதுகாக்கப்பட்ட தீவுப் பகுதிக்கு தற்போது அல்மர்மார் (Almarmar) எனப் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
ஏன் இந்தப் புதுப்பெயர்?
4.3 சதுர கிலோமீட்டர் பரப்புள்ள இந்த தீவுப் பகுதியில் அதிக அளவிலான அலபாஸ்டர் வகை பாறைகள் கிடைக்கின்றன. அல்மர்மார் என்றால் அலபாஸ்டர் என்று அர்த்தமாம்.
பொதுவாக அலபாஸ்டர் என்பது ஜிப்சத்தின் நேர்த்தியான, ஒளிஊடுருவக்கூடிய வடிவமாகும். இது பொதுவாக வெள்ளை நிறத்தில் இருக்கும். இதனைக்கொண்டு ஆபரணங்கள் செய்யலாம் என்பது கூடுதல் சிறப்பு.
Under the directives of Mohamed bin Zayed & the follow-up of Hamdan bin Zayed, @AbuDhabiDMT has named an island off the coast of Al Dhafra ‘Almarmar’, meaning ‘alabaster’, after the tough, white stone found in abundance on the island. pic.twitter.com/QrybmIfvQX
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) December 24, 2020
அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் மற்றும் அல் தஃப்ரா பகுதிக்கான பிரதிநிதியும் எமிரேட்ஸ் ரெட் கிரசண்ட் அமைப்பின் தலைவருமான ஷேக் ஹம்தான் பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோரின் வழிகாட்டுதலின் பேரில் இந்தப் தீவுப் பகுதிக்கு புதுப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாக அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்திருக்கிறது.