UAE Tamil Web

அபுதாபி: மருத்துவமனைகளுக்கு இனி நீங்கள் மார்க் போடலாம்..!

Muashir

அபுதாபி: குடியிருப்பாளர்களுக்கு சுகாதார நிறுவனங்களில் வழங்கப்படும் சிகிச்சைகளின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு புதிய திட்டம் ஒன்று துவங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் நோயாளிகளே மருத்துவமனைக்கு மதிப்பீட்டு அளவுகளை அளிக்கலாம். இந்த சுகாதார தர இன்டெக்ஸ் என்பது முஅஷிர் (Muashir) என்று அழைக்கப்படுகிறது.

- Advertisment -

இந்த டைமண்ட் ரேட்டிங் சிஸ்டத்தில் நான்கு வகையான மதிப்பீடுகள் வழங்கப்படும் அவையாவன: குட் (Good), வெரிகுட் (Very good), எக்செப்ஷனல் (Exceptional) மற்றும் அவுட்ஸ்டான்டிங் (Outstanding).

ஒரு சுகாதார நிறுவனத்தின் தரமானது,

மருத்துவ பராமரிப்பு.

நோயாளி மற்றும் மருத்துவர் மகிழ்ச்சி.

நோயாளியின் கருத்து.

பாதுகாப்பான பணியிடம்.

முறையான உரிமைகோரல்கள்.

ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு உள்ளிட்ட ஒன்பது வகையான விதிகளின் கீழ் மதிப்பிடப்படுகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு துபாய் சுகாதாரத்துறை ஜாவ்தா தர இன்டெக்ஸ் என்னும் மருத்துவ சேவை மதிப்பீட்டுத் திட்டத்தை அமல்படுத்தியது. அதன் நீட்சியாகவே தற்போது இந்தத் திட்டத்தினை துபாய் சுகாதார ஆணையம் நடைமுறைப்படுத்தியுள்ளது.

ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த கேர் குவாலிட்டி கமிஷன் (Care Quality Commission) போன்ற நிறுவனங்களுடன் இணைந்து இந்த தர மதிப்பீட்டுத் திட்டத்தை சுகாதாரத்துறை முன்னெடுத்துள்ளது.