UAE Tamil Web

அபுதாபி: ஒரு வருடத்திற்கான பார்க்கிங் பெர்மிட்களை வழங்க இருக்கும் அரசு..!

sharjah free parking

அபுதாபி அரசு 1, 3, 6 மாதங்கள் மற்றும் ஒரு வருடத்திற்கான பார்க்கிங் பெர்மிட்களை வழங்க இருக்கிறது.

வாடிக்கையாளர்கள், தனிநபர்கள், நிறுவனங்கள் ஆகியவை இந்த திட்டத்தினைப் பயன்படுத்தி அபுதாபி மற்றும் அல் அய்னில் உள்ள பொதுப் பார்க்கிங் இடங்களில் கருப்பு மற்றும் நீல நிற வர்ணம் பூசப்பட்ட இடங்களில் தங்களது வாகனங்களை பார்க்கிங் செய்துகொள்ளலாம்.

கட்டணங்கள்

1 மாதம் – 391 திர்ஹம்ஸ்

3 மாதங்கள் – 1,174 திர்ஹம்ஸ்

6 மாதங்கள் – 2,348 திர்ஹம்ஸ்

1 வருடம் – 4,695 திர்ஹம்ஸ்

வாடிக்கையாளர்கள் www.itc.gov.ae என்ற இணையதள முகவரியில் சென்று E-services என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். விண்ணப்பிப்பவர்கள் தங்களது எமிரேட்ஸ் ஐடி மற்றும் வாகன பதிவு கார்டை (vehicle registration card) சமர்ப்பிக்க வேண்டும்.

நேர மற்றும் நாள் கணக்கிலான பார்க்கிங் கட்டணங்களை செலுத்தும் நிலையில் இருந்து மக்களுக்கு விடுதலை அளிக்க மவாகிஃப் இப்புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) தெரிவித்துள்ளது.

“இது குறிப்பிட்ட பார்க்கிங் பகுதிகளுக்கு (standard parking) மட்டுமே பொருந்தும். குடியிருப்பு மற்றும் வில்லா பகுதிகளில் உள்ள அல்லது நீலம் மற்றும் வெள்ளை நிறத்தில் வர்ணம் பூசப்பட்ட பிரீமியம் பார்க்கிங் இடங்கள் இந்த திட்டத்திற்கு பொருந்தாது” என அதிகாரிகள் தெரிவித்தனர்.

நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் தங்களது வாகனங்கள் பொது நம்பர் பிளேட்டை பெற்றிருக்காத பட்சத்தில் அவற்றிற்கு இந்த திட்டத்தின் அடிப்படையில் பார்க்கிங் பெர்மிட்களை பெறலாம். சரக்கு போக்குவரத்து மற்றும்  சேவை வழங்கு நிறுவனங்களும் தங்களது வாகனங்களுக்கு (கார்கள் மற்றும் பைக்குகள்) இத்திட்டத்தின் மூலமாக பார்கிங் பெர்மிட்டைப் பெறலாம்.

PHOTO

ரெசிடென்ட் பார்க்கிங் பெர்மிட் சேவையில் மாற்றமில்லை

இந்தப் புதிய திட்டமானது ரெசிடென்ட் பார்க்கிங் பெர்மிட் சேவையை எந்த வகையிலும் பாதிக்காது என அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். அதேவேளையில் ரெசிடென்ட் பார்க்கிங் பெர்மிட் மூலமாக ஸ்டாண்டர்ட் பார்க்கிங் இடங்களில் ஒரு மணி நேரத்திற்கு 2 திர்ஹம்ஸ் மற்றும் ஒரு நாளைக்கு 15 திர்ஹம்ஸ் வசூலிக்கப்படுவது இப்புதிய திட்டத்தினால் மாற்றம் பெறும்.

இந்த திட்டத்தின் மூலமாக வாடிக்கையாளர்கள் பார்க்கிங் இடங்களை ரிசர்வ் செய்துகொள்ளவோ, ரிசர்வ் செய்யப்பட்ட பார்க்கிங் இடங்களைப் பயன்படுத்தவோ அல்லது தடை செய்யப்பட்ட இடங்களில் வாகனங்களை நிறுத்தவோ அனுமதியில்லை.

ஆன்லைன் மூலமாக இந்த பெர்மிட்கள் வழங்கப்படுகின்றன. இதனால் காரின் முகப்புப் பக்கத்தில் பெர்மிட்டை வைத்திருக்கவேண்டிய அவசியமும் இல்லை.

பெர்மிட் விபரங்களை வாடிக்கையாளர்கள் எப்போதுவேண்டுமானாலும் திருத்திக்கொள்ளலாம் என ITC தெளிவுபடுத்தியுள்ளது.

அதாவது, பெர்மிட் வைத்திருப்பவர் ஒருவேளை வெளியூருக்குச் செல்வதாக இருந்தால் தனது வாகனத்தை குறிப்பிட்ட இடத்தில் பார்க்கிங் செய்ய அனுமதி கோரி விண்ணப்பிக்கலாம். இதன்மூலம் தனித்துவிடப்பட்ட வாகனம் என அடையாளப்படுத்தப்பட்டு காவல்துறையால் கைப்பற்றப்படும் அபாயத்திலிருந்து தங்களது வாகனத்தைப் பாதுகாக்கலாம்.

sharjah free parking
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap