UAE Tamil Web

வெளிநாட்டினர் வசிப்பதற்கான சிறந்த நகரங்களின் பட்டியல் – டாப் 10 ல் அபுதாபி..!

abudhabi

இண்டர்நேஷன் எக்ஸ்பேட் சிட்டி ரேங்கிங் என்னும் 2020 க்கான வெளிநாட்டு மக்கள் வசிக்க சிறந்த நகரங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 66 நகரங்கள் இந்த பட்டியலில் இருக்கின்றன. இதில் அபுதாபிக்கு 10 வது இடம் கிடைத்துள்ளது.

- Advertisment -

உலகம் முழுவதிலுமிருந்து 173 நாடுகளைச் சேர்ந்த 15,000 பேர் இந்த கருத்துக்கணிப்பில் கலந்துகொண்டனர். நகர வாழ்க்கை, வாழ்க்கைத் தரம், குடியேறும் வாய்ப்பு உள்ளிட்ட 25 அம்ச கேள்விகள் இந்த கருத்துக்கணிப்பில் கலந்துகொண்ட நபர்களிடம் கேட்கப்பட்டன.

பிரபல மேலாண்மை ஆலோசனை நிறுவனமான கேர்னி (Kearney) கடந்தவாரம் உலகளாவிய நகரங்களின் அறிக்கையை (GCR) வெளியிட்டது. இதில் கடந்தமுறை அவுட்லுக் இன்டெக்ஸில் 20 வது இடத்தில் இருந்த அபுதாபி 13 இடங்கள் முன்னேறி 7 ஆம் இடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது.