UAE Tamil Web

அபுதாபி: 35 லட்சம் திர்ஹம்ஸ் செலவில் புதிய பார்க்கிங் இடங்களைத் திறந்தது நகராட்சி..!

NAT-AD-

மக்களின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் விதமாகவும் போக்குவரத்தை சீராக்கும் நோக்கத்துடனும் அபுதாபியின் E25 பகுதியில் கூடுதல் பொதுப் பார்க்கிங் இடங்களை அபுதாபி நகராட்சி திறந்துள்ளது.

அல் மாமோரா வீதி (Al Mamoura) மற்றும் அல் பஹ்ர் டவர்களின் (Al Bahr Towers) முகப்புப் பகுதியில் கட்டப்பட்டுள்ள இந்த புதிய பார்க்கிங் அமைக்க 3.5 மில்லியன் திர்ஹம்ஸ் செலவானதாக அபிதாபி நகராட்சி தெரிவித்துள்ளது.

NAT-AD-PIC126
Image Credit: Gulf News

இந்த பார்க்கிங் பகுதிகள் அமைந்துள்ள பகுதிக்கு அருகில் வீடுகள், குடியிருப்பு வளாகங்கள் மற்றும் அலுவலக டவர்கள் அமைந்துள்ளன. இவை அபுதாபியின் வளர்ந்துவரும் முக்கிய பகுதிகள் ஒன்றாகும் என நகராட்சி தெரிவித்துள்ளது.

NAT-AD-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap