UAE Tamil Web

அபுதாபி டோல் கேட்கள்: வாகன ஓட்டிகள் ‘DARB’ சிஸ்டமில் ரிஜிஸ்டர் செய்வது எப்படி.? எளிய வழிமுறைகள் உள்ளே (வீடியோ)

steps

அபுதாபியில் வரும் ஜனவரி 2 முதல் நான்கு டார்ப்(Darb) டோல் கேட்கள் செயல்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விரிவான தகவல்களை அறிய இங்கே கிளிக் செய்யவும்.

இந்நிலையில் அபுதாபியில் உள்ள அதிகாரிகள் Darb டோல் கேட் சிஸ்டமில் தனிநபர்கள் பதிவு செய்வதற்கான படிகளை பட்டியலிட்டுள்ளனர். அபுதாபியில் உள்ள ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் இது தொடர்பாக ஒரு விளக்க வீடியோவை பகிர்ந்துள்ளது. அந்த விவரங்கள் மற்றும் வீடியோவை கீழே காணலாம்.

  • முதலில் http://darb.itc.gov.ae வெப்சைட்டிற்கு செல்ல வேண்டும் (அல்லது) Darb App-ஐ டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
  • create new account சென்று அதில் Individual tab-ஐ தேர்வு செய்ய வேண்டும்.
  • உங்களது இ-மெயில் முகவரியை டைப் செய்ய வேண்டும்
  • பின் உங்கள் இ-மெயிலுக்கு அனுப்பப்பட்ட OTP-ஐ என்டர் செய்ய வேண்டும்
  • உங்கள் வாகனம் பதிவு செய்யப்பட்ட எமிரேட்டை தேர்ந்தெடுக்கவும்.
  • உங்கள் டிராஃபிக் கோட்-ஐ (traffic code) என்டர் செய்யவும்.
  • உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் தொலைபேசி எண்ணை டைப் செய்து verify number-ஐ கிளிக் செய்ய வேண்டும்.
  • உங்கள் மொபைலுக்கு அனுப்பப்படும் OTP-ஐ டைப் செய்ய வேண்டும்.
  • இறுதியாக ரிஜிஸ்ட்ரேஷனை முடிக்க பாஸ்வேர்டை டைப் செய்யவும்.

 

steps
0 Shares
Share via
Copy link