UAE Tamil Web

அபுதாபியில் ஜனவரி 2 முதல் செயல்பாட்டிற்கு வரும் Darb டோல் கேட்கள்.. எப்படி செயல்படும், பதிவு செய்வது எப்படி, எவ்வளவு கட்டணம்.?

toll

அபுதாபியில் வரும் ஜனவரி 2-ஆ ம் தேதி முதல் 4 டார்ப் டோல் கேட்கள் செயல்பாட்டிற்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே வாகன உரிமையாளர்களை ‘டார்ப்’(Darb)டோல் கேட் முறைக்கு பதிவு செய்து கொள்ளுமாறு அபுதாபி அதிகாரிகள் அழைப்பு விடுத்துள்ளனர்.

- Advertisment -

இதற்காக குடியிருப்பாளர்கள் தங்கள் ஆன்லைன் கணக்குகளை பிரத்யேக வலைத்தளமான darb.itc.gov.ae மூலமோ அல்லது டார்ப் மொபைல் செயலி(Darb mobile app) மூலமோ செயல்படுத்தி கொள்ளுமாறு, அபுதாபியின் பொது போக்குவரத்து வழங்குநர், நகராட்சிகள் மற்றும் போக்குவரத்து ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC),ஆகியவை கேட்டு கொண்டுள்ளன.

4 இடங்களில்..

முதற்கட்டமாக Darb டோல் கேட் சிஸ்டம் 4 இடங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. அபுதாபிக்கு செல்லும் ஷேக் சயீத் பாலம், ஷேக் கலீஃபா பின் சயீத் பாலம், அல் மக்தா பாலம் மற்றும் முசாஃபா பாலம் ஆகிய 4 பாலங்களில் மட்டுமே ‘டார்ப்’ செயல்படுத்தப்பட உள்ளது.

கட்டணம் வசூல் செய்யப்படும் நேரம்..

வார நாட்களில் சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை பீக் ஹவர்களில் அதாவது காலை 7-9 மணி மற்றும் மாலை 5-7 மணி வரை மட்டுமே மேற்கண்ட 4 இடங்களில் அமைக்கப்பட்டுள்ள Darb டோல் கேட்டில் கட்டணம் உண்டு. வெள்ளிக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்களில் எந்த கட்டணமும் இருக்காது.

எவ்வளவு கட்டணம்.?

போக்குவரத்து ஓட்டத்தை மேம்படுத்தவும், மாற்று போக்குவரத்து வழிகளை பயன்படுத்துவதை ஊக்குவிப்பதற்கும் ஒவ்வொரு கிராசிங்கிற்கும் 4 திர்ஹம்ஸ் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும் என்று அபுதாபி ஊடக அலுவலகம் கூறியுள்ளது.

சாலை பயனர்களுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்க ஒவ்வொரு வாகனத்திற்கும் அதிகபட்ச தினசரி கட்டண விகிதம் 16 திர்ஹம்ஸாக இருக்கும். கூடுதலாக, ஒரு பயனரின் கணக்கில் முதல் வாகனத்திற்கு அதிகபட்சம் மாதந்தோறும் 200 திர்ஹம்ஸ், இரண்டாவது வாகனத்திற்கு 150 திர்ஹம்ஸ் மற்றும் அனைத்து கூடுதல் வாகனங்களுக்கும் 100 திர்ஹம்ஸாக இருக்கும்.

எப்படி வேலை செய்யும்.?

பயனர்கள் தங்கள் ஆன்லைன் கணக்குகளை டாப் அப் செய்த பின், குறிப்பிட்ட டோல் கேட்டுகளை தங்களது வாகனத்தில் கடந்து செல்லும் போது அவர்களது கணக்கிலிருந்து கட்டணம் நேரடியாக கழிக்கப்படும். இதற்காக டோல் கேட்டில் பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் சிஸ்டம் பயனர்களின் வாகன நம்பர் பிளேட்டுகளை துல்லியமாக படம் பிடித்து கொள்ளும்.

Darb டோல் கேட் அமைப்பில் ஒரு வாகனத்திற்கு துவக்க வாகனம் பதிவு கட்டணம் 100 திர்ஹம்ஸ். இதில் 50 திர்ஹம்ஸ் பயனர்கள் பதிவு செய்த கணக்கில் வரவு வைக்கப்படும். டோல் கேட்களை கடக்கும்போது பயனர்கள் தங்கள் கணக்குகளில் போதுமான பணம் இருப்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும். எனினும் அபுதாபியில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களுக்கு, வாகன ஓட்டுநர்கள் வருடாந்திர வாகன உரிம நடைமுறைகளை முடிக்கும்போது செலுத்தப்படாத எந்தவொரு கட்டணத்தையும் செலுத்த முடியும்.

ஆனால் அபுதாபிக்கு வெளியே பதிவுசெய்யப்பட்ட வாகனங்களுக்கு, அபராதம் விதிக்கப்படும் முன் கணக்கை ரீசார்ஜ் செய்ய வாகன ஓட்டிகளுக்கு 5 வணிக நாட்கள் கருணை காலம் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.