UAE Tamil Web

வாகன ஓட்டிகள் லேன்களை மாற்றும் போது இதை செய்வது அவசியம்.! இல்லையெனில் அபராதம்.. அபுதாபி போலீஸ் எச்சரிக்கை

abudhabi

சாலையில் சென்று கொண்டிருக்கும் வாகன ஓட்டிகள் தங்கள் லேன்களை(பாதைகளை) மாற்றும் போது இன்டிகேட்டர்களை தவறாமல் பயன்படுத்த அபுதாபி காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

- Advertisment -

இது தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ள அபுதாபி போலீஸ், சாலை விபத்துகள் மற்றும் அபராதங்களை தவிர்க்க லேன்களை மாற்றும் போதெல்லாம் உடனடியாக வாகன ஓட்டிகள் இன்டிகேட்டர்களை பயன்படுத்த வேண்டும்.

விதிகளை மீறி இன்டிகேட்டர்களை பயன்படுத்தாமல் திடீரென லேன்கள் மாறும் மீறலில் ஈடுபடுவோருக்கு 400 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் என்று அதிகாரிகள் கூறி உள்ளனர். பாதுகாப்பு ஊடகத் துறை(security media department) தலைவரான கர்னல் நாசர் அப்துல்லா அல்-சாடி கூறுகையில், ‘பாதுகாப்பான டிரைவிங் நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வை பரப்பும் நோக்கத்துடன், அபுதாபி காவல்துறை தனது சமூக ஊடகங்கள் மூலம் தொடர்ந்து பிரச்சாரம் செய்து வருகிறது.

இன்டிகேட்டர்களை பயன்படுத்தாமல் பாதைகளை மாற்றும் போது குறிப்பாக வாகன நெரிசலில் இருந்து தப்பிக்க முயலும் சில ஓட்டுனர்களின் விதி மீறல் செயலானது, குறிப்பிட்ட வாகனத்திற்கு பின்னால் அல்லது இணையாக வரும் வாகன ஓட்டிகளின் கவன சிதறலுக்கு காரணமாகிறது. விபத்துகள் ஏற்படவும் வழிவகுக்கிறது.

எனவே ஓட்டுநர்கள் தங்களது வாகனத்தை மெதுவாக்கும் போதும், பாதைகளை மாற்றும் போதும் அல்லது சாலையில் ஏற்படும் எமர்ஜென்சி நிலைகளின் போதும் உரிய சிக்னல்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.