UAE Tamil Web

அண்மைச் செய்தி: இந்த நாடுகளிலிருந்து அபுதாபி வருவோர் குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை..!

abudhabi

அபுதாபி கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை (DCT Abu Dhabi) புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

கிரீன் நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகள்/பிராந்தியங்கள்/யூனியன் பிரதேசங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை DCT Abu Dhabi இன்று வெளியிட்டுள்ளது.

இந்த கிரீன் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள்/பிராந்தியம்/யூனியன் பிரதேசங்களில் இருந்து வருபவர்கள் (அந்நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் அல்ல) அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் PCR பரிசோதனை செய்துகொண்டால் போதுமானது. அவர்கள் கட்டாய குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை.

கடைசியாக வெளியிடப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியலுடன் ஒப்பிடுகையில் தற்போது இஸ்ரேல் மற்றும் தென்கொரியா ஆகியவை பட்டியலில் புதிதாக இணைக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியல்:

  1. ஆஸ்திரேலியா
  2. பூட்டான்
  3. புருனே
  4. சீனா
  5. கிரீன்லாந்து
  6.  ஹாங்காங் (SAR)
  7. ஐஸ்லாந்து
  8. இஸ்ரேல்
  9. மொரீஷியஸ்
  10. நியூசிலாந்து
  11.  சிங்கப்பூர்
  12. மொரோக்கோ
  13. சவூதி அரேபியா
  14. தென்கொரியா
abudhabi
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap