UAE Tamil Web

முக்கியச் செய்தி: அபுதாபியில் அனைத்து தனியார் நிறுவன ஊழியர்களும் கட்டாயம் வாரமொருமுறை PCR பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும்..!

CoronaVaccine

அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத்துறை இன்று அபுதாபியில் உள்ள தனியார் நிறுவனங்களுக்கு புதிய சுற்றறிக்கை ஒன்றினை அனுப்பியிருக்கிறது. இதனடிப்படையில் நம்முடைய குழு அபுதாபியில் இயங்கிவரும் பிரபல தனியார் நிறுவன மேலாளரை அணுகியது.

- Advertisment -

இதன் மூலம் அபுதாபி பொருளாதாரத்துறை வெளியிட்ட சுற்றறிக்கையின் சாராம்சத்தை நமது குழு அறிந்துகொண்டது. அதன்படி,

  • ஒவ்வொரு நிறுவனமும் தங்களது ஊழியர்கள் அனைவரும் வாரமொருமுறை PCR பரிசோதனை எடுத்திருப்பதை உறுதிசெய்தல் வேண்டும்.
  • தேசிய தடுப்பூசித் திட்டம் அல்லது கொரோனா தடுப்பூசி ஆய்வில் தன்னார்வலர்களாக தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு இந்த நடைமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
  • மேலே குறிப்பிட்டுள்ள கருத்துக்கு எதிராக இதற்கு முன்னர் வெளிவந்த சுற்றறிக்கைகள் இருந்தால் அவற்றைப் புறக்கணிக்குமாறும், மேலே குறிப்பிட்டுள்ள நடைமுறையை மறு அறிவிப்பு வெளிவரும் வரையில் தொடர்ந்து கடைபிடிக்குமாறும் பொருளாதார மேம்பாட்டுத்துறை தெரிவித்திருக்கிறது.