UAE Tamil Web

அபுதாபி: ஒரேயொரு போன்கால் – உங்களது வீட்டிற்கே வரும் கொரோனா தடுப்பூசி..!

Corona Vaccine

அபுதாபியில் வயதானவர்கள் மற்றும் குடிமக்களுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தை அரசு இன்று முதல் துவக்கியுள்ளது.

இதுகுறித்து அபுதாபி ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தியில்,” அபுதாபி பொது சுகாதார மையம், தியாகிகள் குடும்ப விவகார அலுவலகம், அபுதாபி பட்டத்து இளவரசரின் நீதிமன்றத்தில் அமைந்துள்ள மஜாலிஸ் விவகார அலுவலகம், சேஹா, குடும்ப மேம்பாட்டுத்துறை ஆகியவை இணைந்து “வீ ரீச் யூ, வேரெவர் யூ ஆர்” (We Reach You, Wherever You Are) என்னும் திட்டத்தைத் துவங்கியுள்ளன.

இத்திட்டத்தின் மூலமாக அபுதாபியில் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் தங்கள் வீடுகளில் இருந்தவாறே கொரோனா தடுப்பூசியினைப் பெற்றுக்கொள்ளலாம்.

கொரோனாவால் எளிதில் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புள்ள நபர்களுக்கு கொரோனா தடுப்பூசியினை கொண்டுசேர்க்கும் நோக்கில் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது.

எப்படி முன்பதிவு செய்வது?

வீட்டிலேயே கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள விரும்பும் நபர்கள் சேஹாவின் 800 50 என்ற இலவச அழைப்பு எண்ணிற்கு அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஷார்ஜாவில் இதேபோல, மொபைல் கொரோனா தடுப்பூசி சேவை துவங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Corona Vaccine
0 Shares
Share via
Copy link