UAE Tamil Web

கச்சிதமாக தகர்க்கப்பட்ட மினா சயீத் டவர் – 10 வினாடிகளில் நொறுங்கிய 144 தளங்கள் – பிரத்யேக வீடியோ..!

_Mina Zayed demolition-7

மினா சயீத் பகுதியை மீளுருவாக்கம் செய்யும் பணியின் ஒரு பகுதியாக அங்குள்ள மினா பிளாசா டவரை வெடிவைத்து தகர்க்க இருப்பதாக அபுதாபி அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதற்கான இறுதிகட்டப் பணிகள் நேற்று நடைபெற்றன.

- Advertisment -

இந்நிலையில் இன்று காலை மினா பிளாசாவின் 4 டவர்களும் தர்க்கப்பட்டதாக அபுதாபி ஊடக அலுவலகம் ட்விட்டரில் தெரிவித்திருக்கிறது.

தனது ட்விட்டர் பக்கத்தில்,”மினா சயீத் பகுதியை மீளுருவாக்கம் செய்யும் திட்டத்தின் இரண்டாம் பகுதியாக மினா பிளாசா டவரை மோடன் ப்ராபர்டீஸ் நிறுவனம் இன்று 10 வினாடிகளில் தகர்த்தது” என அபுதாபி ஊடக அலுவலகம் தெரிவித்திருக்கிறது.

வெடிப்பினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து சுற்றுப்புறத்தை காப்பதற்கு தேவையான பாதுகாப்பு வழிமுறைகள் தீவிரமாக பின்பற்றப்பட்டன. நிலையான முதன்மை இல்லாத வெடிபொருட்களைக்கொண்டு கட்டிடம் பாதுகாப்பாக தகர்க்கப்பட்டது. இதுகுறித்து நேற்றே குடியிருப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.

துறைமுகம் இன்று பிற்பகல் 4 மணிவரையில் மூடப்படும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது.

அபுதாபி நகராட்சி மற்றும் போக்குவரத்து துறையினரால் நியமிக்கப்பட்ட மோடன் ப்ராபர்டீஸ் நிறுவனம் கச்சிதமாக இந்த வெடிப்பை நிகழ்த்தியிருக்கிறது. இப்பணியில் அபுதாபி காவல்துறை, அபுதாபி சிவில் பாதுகாப்பு ஆணையம், அவசர மீட்புக்குழு,  தேசிய ஆம்புலன்ஸ் மற்றும் தேசிய அவசர மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகிய அமைப்புகள் ஈடுபட்டன.

வீடியோ