UAE Tamil Web

4.37 ஏக்கரில் அமைய உள்ள மிகப்பெரிய கிறிஸ்துவ தேவாலயம்.! 9 மாதங்களில் கட்டி முடிக்க திட்டம்..

csi

அபுதாபியில் கட்டப்பட்டு வரும் இந்து கோயிலுக்கு அருகில் அமைய உள்ள சர்ச் ஆஃப் தென்னிந்தியா(CSI) கிறிஸ்துவ தேவாலயத்தின் ராஃப்ட் அடித்தளத்திற்கு கான்கிரீட் ஊற்றப்படும் நிகழ்வு, நவம்பர் 25 புதன்கிழமை(நாளை) ஒரு விழாவுடன் தொடங்க உள்ளது.

அபு முரைக்கா பகுதியில் கட்டப்பட்டு வரும் இந்து கோவிலின் அருகில் அமைக்கப்பட உள்ள தேவாலயம் பற்றி பேசிய பாரிஷ் சோஜி வர்கீஸ் ஜான், 4.37 ஏக்கர் நிலத்தில் கட்டப்படும் தேவாலயத்தின் ராஃப்ட் அடித்தளத்திற்கு நாளை கான்கிரீட் ஊற்றப்படும் என்றார். சிமென்ட் கொட்டும் இந்த நிகழ்வு 9 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ள தேவாலய கட்டுமானத்தின் தொடக்கத்தை குறிக்கிறது என்று தெரிவித்தார்.

கோவிட் -19 நெறிமுறைகளுக்கு இணங்க இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் ஒரு எளிய விழா இருக்கும். விழாவில் உலகத்திற்காக சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்படும். எண்கோண வடிவிலான 12,000 சதுர அடி தேவாலய கட்டடத்தில் 750 வழிபாட்டாளர்கள் ஒரே நேரத்தில் பிரார்த்தனையில் ஈடுபட முடியும்.

இந்த தேவாலயத்தின் அமைப்பு உயரமான, குறுகிய ஜன்னல்கள் மற்றும் ஒரு வளைந்த கதவு போன்றிய இஸ்லாமிய வடிவமைப்பை கொண்டு ஹிந்து-முஸ்லீம் மத கலவையாக இருக்கும். தேவாலய கட்டடத்தின் மொத்த கட்டுமான செலவு, தள உள்கட்டமைப்பு, எல்லைச் சுவர் என மொத்தம்10.8 மில்லியன் திர்ஹம்ஸ் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த கட்டுமானம் பல கட்டங்களாக கட்டப்படும் என்று தகவல் தெரிவித்துள்ள சர்ச் கட்டிடக் குழு அதிகாரிகள், 2021-ம் ஆண்டின் நடுப்பகுதியில் மக்கள் வழிபாட்டிற்காக தேவாலயம் திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாம் கட்ட பணிகளை நிறைவு செய்வதற்கான கனவை நிறைவேற்ற பாரிஷ் உறுப்பினர்களும், நலம் விரும்பிகளும் முழு மனதுடன் பங்களித்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பரில் தேவாலயத்திற்கு அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில், தேவாலயத்தின் இறுதி வடிவமைப்பை உள்ளூர் அதிகாரிகள் அங்கீகரித்துள்ளனர்.

இந்த தேவாலயம், அபுதாபியில் உள்ள தென்னிந்திய திருச்சபையின் இரண்டாவது மிகப்பெரிய ஆலயமாக இருக்கும். அமீரகத்தின் மிகப்பெரிய தேவாலயம் ஏற்கனவே புஜைராவில் உள்ளது.

தேவாலய கட்டுமான பணியில் ஈடுபட்டுள்ள நிர்வாகிகள் குழு, அமீரகத்தில் சகிப்புத்தன்மையின் புதிய சின்னத்தை சேர்க்கும் கனவை நனவாக்க ஆதரவு அளிக்கும் அமீரக தலைவர்களுக்கு “ஆழ்ந்த நன்றி” தெரிவித்து கொள்வதாக அடிக்கோடிட்டு கூறியுள்ளனர்.

csi
0 Shares
Share via
Copy link