UAE Tamil Web

அபுதாபிக்குள் நுழைபவர்கள் கவனத்திற்கு: கொரோனா அறிவிப்புகளை வழங்க ரேடியோ ஒலிபரப்பு சேவை அறிமுகம்..!

Abdhabi Police

அபுதாபிக்குள் நுழைபவர்கள் பின்பற்றவேண்டிய கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் குறித்த ரேடியோ ஒலிபரப்பு சேவையை அபுதாபி காவல்துறை துவக்கியுள்ளது. 24 FM நிலையங்கள் வாயிலாக அபுதாபி எல்லைப் பகுதிகளில் அமைந்துள்ள சோதனை சாவடிக்கு அருகில் செல்லும்போது மக்கள் இந்த சேவையைப் பயன்படுத்தி எம்மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் எனத் தெரிந்துகொள்ளலாம்.

- Advertisment -

இந்த சேவையானது அரபி, உருது, ஆங்கிலம் மற்றும் மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் ஒலிபரப்பப்படும் என அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.

சோதனை சாவடிக்கு 200 மீட்டர் தூரத்தில் நீங்கள் வரும்போதே, கொரோனா பரிசோதனை, முகக்கவசம் அணிதல், காரில் வருபவர்கள் உறவினர்களாக இல்லாதபட்சத்தில் ஒரு காருக்கு அதிகபட்சமாக 3 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வானொலி வாயிலாக ஒலிபரப்பத் துவங்கும்.

இந்த திட்டமானது எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது என்பதை விளக்க அபுதாபி காவல்துறை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினை (கீழே கொடுக்கப்பட்டுள்ளது) வெளியிட்டுள்ளது.