அபுதாபியிலுள்ள தனியார் பள்ளிகள் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அனைத்து தனியார் பள்ளி மாணவர்களையும் மீண்டும் வளாக கற்றல் முறைக்கு(வகுப்பறைக்கு) வரவேற்க உள்ளன. கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிட் -19 தொற்று நோய்க்கான அபுதாபி அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு மற்றும், கல்வி மற்றும் அறிவுத் துறை(ADEK)ஆகியவை அபுதாபியில் உள்ள தனியார் பள்ளிகள், ஜனவரி மாதம் முதல் அனைத்து மாணவர்களையும் வகுப்பறைகளுக்கு வரவேற்கும் முடிவு ஒப்புக்கொண்டுள்ளதாக, அபுதாபி ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
The Abu Dhabi Emergency Crisis and Disasters Committee for Covid-19 Pandemic and the Department of Education and Knowledge (@ADEK_tweet) have agreed that private schools in #AbuDhabi will welcome all students back to classrooms from January. pic.twitter.com/X4gwHoRQnD
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) November 3, 2020
தனியார் பள்ளிகளுடன் ஒருங்கிணைந்து, மாணவர்கள் மற்றும் ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்க தேவையான தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செயல்படுத்துவதில் அபுதாபி கல்வி மற்றும் அறிவுத் துறை அவர்களுக்கு ஆதரவளிக்கும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக அக்டோபரில் தலைநகரில் உள்ள தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள், நிர்வாக ஊழியர்களுக்கு அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், தொற்றுக்கு மத்தியில் நேரடி வகுப்பில் பங்கேற்கும் மாணவர்களைப் பாதுகாக்கவும், 2 வாரங்களுக்கு ஒரு முறை அவர்களை கோவிட் -19 சோதனை உட்படுத்த வேண்டியிருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அதேபோல நடப்பு பள்ளி ஆண்டின் தொடக்கத்தில் மாணவர்களைப் பெறுவதற்கு முன் கோவிட் -19 சோதனை நடத்த, அபுதாபியில் உள்ள தனியார் பள்ளிகள் தங்கள் ஊழியர்களை(ஆசிரியர்கள் மற்றும் நிர்வாக ஊழியர்கள் உட்பட) கொண்டிருக்க வேண்டும் என்று கல்வி மற்றும் அறிவுத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.