UAE Tamil Web

கோவிட்-19: இன்னும் இரண்டே வாரங்களில் முழுமையாக பழைய நிலைக்கு திரும்புகிறது அபுதாபி.! சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகளுக்கு அனுமதி..

abudhabi

அமீரக தலைநகரான அபுதாபியில் அனைத்து பொருளாதார, சுற்றுலா, கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் இன்னும் இரண்டே வாரங்களுக்குள் முழுமையாக மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

கோவிட்-19 தொற்றுநோய்க்கான அபுதாபி அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பெருந்தொற்று காரணத்தால் மக்கள் ஒன்றாக கூடும் பல செயல்பாடுகளுக்கு அபுதாபியில் தடை விதிக்கப்பட்டது. படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பும் முயற்சியாக கடந்த செப்டம்பர் முதல், சமுக இடைவெளி மற்றும் கட்டாய முகக்கவசம் உள்ளிட்ட கடும் கட்டுப்பாடுகளுடன் குறிப்பிட்ட சில செயல்பாடுகள் தற்போது இயக்கத்தில் உள்ளன.

இந்நிலையில் தொற்று பரவலுக்கு எதிராக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நல்ல முடிவை தந்துள்ளதாலும், தொற்று பாதிப்பு விகிதமும் குறைந்த அளவிலேயே தொடர்ந்து இருப்பதாலும் அபுதாபியில் அனைத்து செயல்பாடுகளையும் முழுமையாக அனுமதிக்கும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுகாதார நோக்கங்களுக்காக ஏற்கனவே உள்ள முன்னெச்சரிக்கை விதிமுறைகள் அனைத்தும் மேம்படுத்தப்படும். தொற்றுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என்று அபுதாபி அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு உறுதிபட கூறியுள்ளது.