UAE Tamil Web

“நான் அபுதாபியின் இளவரசர் பேசுகிறேன்” – எதிர்பாராத போன் கால் மூலம் குடும்பங்களை திகைக்க வைத்த அல் நஹ்யான்..!

Sheikh Mohamed bin Zayed Al Nahyan

அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயதப் படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் கொரோனாவிற்கு எதிரான அமீரகத்தின் போரில் உயிரிழந்த வீரர்களின் குடும்பங்களை போன் மூலமாக அழைத்துப் பேசினார்.

எதிர்பாராத நேரத்தில் இளவரசரிடமிருந்து வந்த போன் காலினால் மக்கள் திகைப்படைந்திருக்கின்றனர்.

“நமது சமூகத்தின் அங்கமாக நம்முடன் வாழ்ந்து நம்முடைய பாதுகாப்பிற்காகவும் சமூகத்தின் ஆரோக்கியத்திற்காகவும் உழைத்ததற்கு அமீரகம் என்றென்றும் இவ்வீரர்களுக்கு நன்றி செலுத்தும். டாக்டர். சுதிர் ராம்பவு வாஷிம்கர், நர்ஸ் லெஸ்லி ஓரியோனி, அன்வர் அலி, அகமது அல் சபேய், டாக்டர். பாசம் பெர்னி போன்ற வீரர்கள் நம்முடைய நலனுக்காக அவர்களது உயிரை விலையாகக் கொடுத்திருக்கிறார்கள். அமீரகம் என்றென்றும் அவர்களது பெயர்களை நினைவில் வைத்திருக்கும். அமீரகத்திற்காக இன்னுயிரை இழந்தவர்களின் குடும்பங்களுக்கு என்றும் நமது நாடு உறுதுணையாக நிற்கும்” என அல் நஹ்யான் போனில் பேசும்போது குறிப்பிட்டார்.

தங்களுக்கு போன் மூலம் ஆறுதல் அளித்ததற்கும் அமீரகத்தின் வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் உழைக்கும் தலைவர்களுக்கு மக்கள் நன்றி தெரிவித்தனர். அதுமட்டுமல்லாமல் பொதுமக்களின் மீது இளவரசர் காட்டும் பரிவுக்கு நன்றிக்கடன்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

அமீரகத்திற்காக அவர்கள் உயிரிழந்தது தங்களுக்கு பெருமையளிப்பதாகவும் அல்லாஹ் அவர்களின் ஆன்மாவிற்கு அமைதியைக் கொடுக்கட்டும் எனவும் வலுவான தலைமையின் கீழ் அமீரகம் பாதுகாப்பும் ஆரோக்கியமும் பெற்று நீடூடி வாழ வாழ்த்துவதாக கொரோனாவினால் உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

உயிர்நீத்தவர்களின் புகழை அமீரக குடிமக்களும் குடியிருப்பாளர்களும் பரப்பவேண்டும் எனவும் அவர்கள் நமக்கெல்லாம் முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும் அவர்களது தியாகத்தின் மதிப்பை நாம் அனைவரும் உணரவேண்டும் என இளவரசர் குறிப்பிட்டார்.

Sheikh Mohamed bin Zayed Al Nahyan
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap