அபுதாபி சுகாதாரத்துறை மற்றும் அபுதாபி பொது சுகாதார மையம் ஆகியவை இணைந்து அபுதாபியில் இலவச கொரோனா தடுப்பூசித் திட்டத்தை நேற்று முதல் துவங்கியிருக்கின்றன. அமீரக குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் இந்த தடுப்பூசியை இலவசமாகப் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
As part of the continuous efforts to curb the spread of Covid-19, the @DoHSocial and @adphc_ae launch a free vaccination campaign for all UAE nationals and residents. pic.twitter.com/F6kBmezwmw
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) January 4, 2021
அபுதாபி சுகாதாரத்துறைத் தலைவர் அப்துல்லா பின் முகமது அல் ஹமீத் (Abdullah bin Mohammed Al Hamed) இதுகுறித்துப் பேசுகையில்,”எங்கள் மக்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இருப்பதை உறுதிப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். அதனால்தான் தடுப்பூசிகளின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் தரத்தை உறுதிப்படுத்த கடுமையான சோதனைகளுக்கு அவை உட்படுத்தப்பட்டன” என்றார்.
Abdullah bin Mohammed Al Hamed, Chairman of @DoHSocial said:
“We want to ensure our people continue to be safe, which is why the vaccines have undergone rigorous trials to ensure their safety, efficacy and quality. pic.twitter.com/xEEUB2RnCk— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) January 4, 2021
“அங்கீகரிக்கப்பட்ட இந்த COVID-19 தடுப்பூசிகள் பாதுகாப்பானவை. இவற்றைப் பெறுபவர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ள தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை இவை வழங்கும். நம்முடைய வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வர அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள் என்று நம்புகிறேன்” என அபுதாபி சுகாதாரத்துறையின் துணைச்செயலாளர் டாக்டர். ஜமால் முகமது அல்காபி (Jamal Mohammed Alkaabi)
Matar Al Nuaimi, Director General of the Abu Dhabi Public Health Centre, said: “The most effective way to fight Covid-19 is with vaccines. I hope everyone chooses to vaccinate, to break the infection chain and be a part of victory against this pandemic.” pic.twitter.com/qK4RPhPvJh
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) January 4, 2021
அபுதாபி பொது சுகாதார மையத்தின் தலைமை இயக்குனர் மட்டார் அல் நுவைமி (Matar Al Nuaimi) பேசும்போது,”கோவிட் -19 உடன் போராடுவதற்கான மிகச் சிறந்த வழி தடுப்பூசிகள் தாம். தொற்று சங்கிலியை உடைக்கவும், இந்த தொற்றுநோய்க்கு எதிரான போரில் வெற்றிபெறவும் பொதுமக்கள் இந்த கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொள்ள முன்வருவார்கள் என நம்புகிறேன்” என்றார்.