UAE Tamil Web

டிரக் டிரைவர்கள் அபுதாபிக்குள் நுழைவதற்கான கட்டுப்பாடுகளில் மாற்றம்..!

Truck

அபுதாபிக்கு டிரக்குகள் உள்ளிட்ட பொருட்களை ஏற்றிச்செல்லும் வாகனங்களை இயக்கும் ஓட்டுனர்களுக்கான புதுப்பிக்கப்பட்ட நுழைவு விதிமுறை வெளிவந்திருக்கிறது.

- Advertisment -

இந்த வாகனவோட்டிகள் தங்களது பயண நேரத்திற்கு முன்னதாக 7 நாட்களுக்குள் எடுக்கப்பட்ட கொரோனா நெகட்டிவ் சான்றிதழை பயணத்தின்போது சமர்ப்பிக்க வேண்டும்.

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்களுக்கு இந்த நடைமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

அபுதாபியில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக இந்த புதுப்பிக்கப்பட்ட விதிமுறையை அபுதாபியின் அவசரநிலை நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் இன்று வெளியிட்டுள்ளது.