UAE Tamil Web

கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள் அபுதாபிக்கு வந்தடைந்த 4 மற்றும் 8 ஆம் நாளில் கொரோனா பரிசோதனைகளை எடுத்துக்கொள்ள வேண்டுமா?

Coronavirus PCR test

பிற நாடுகள் மற்றும் எமிரேட்களில் இருந்து அபுதாபி வருவோர் அல்லது அபுதாபிக்குத் திரும்பும் குடியிருப்பாளர்கள் அபுதாபிக்குள் நுழைந்த தினத்திலிருந்து 4 மற்றும் 8 வது நாட்களில் கொரோனா PCR பரிசோதனையை மேற்கொள்ளவேண்டும். இருப்பினும் ஓரிரு நபர்களுக்கு இந்த நடைமுறையில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

இதுகுறித்து சமூக வலைத்தளத்தில் கேள்வி – பதில் வடிவத்தில் விளக்கியுள்ள அபுதாபி பொது சுகாதார மையம் (ADPHC),” நான் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டு தற்போது என்னுடைய AlHosn அப்ளிகேஷனில் E எழுத்து தோன்றியிருக்கிறது. நான் அபுதாபி வந்தடைந்த 4 மற்றும் 8 ஆம் நாளில் PCR பரிசோதனையை எடுத்துக்கொள்ளவேண்டுமா?

இல்லை. அபுதாபிக்குள் நுழையும்போது சோதனை சாவடியில் நீங்கள் உங்களுடைய AlHosn அப்ளிகேஷனில் உள்ள ஸ்டேட்டசை (E எழுத்து) காண்பித்தால் போதுமானது” எனக் குறிப்பிட்டுள்ளது.

அதேபோல, கொரோனா தடுப்பூசி ஆய்வின் தன்னார்வலர்கள் மற்றும் தேசிய தடுப்பூசித் திட்டத்தின் அடிப்படையில் தடுப்பூசி பெற்றுக்கொண்டு தங்களது AlHosn அப்ளிகேஷனில் சிறப்பு ஸ்டேட்டசைப் பெற்றிருப்பவர்கள் (தங்க நட்சத்திரம் மற்றும் E எழுத்து) அபுதாபி வந்தடைந்த 4 மற்றும் 8 ஆம் நாளில் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளத் தேவையில்லை என ADPHC விளக்கியுள்ளது.

சிறப்பு அந்தஸ்தும், அதனைத் தக்கவைக்கும் வழிமுறையும்

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்களுக்கு, அவர்களுடைய AlHosn அப்ளிகேஷனில் சிறப்பு அந்தஸ்தை குறிக்கும் விதமாக ஸ்டேட்டஸ் ஒன்று வழங்கப்படும். அபுதாபிக்குள் நுழைய நெகட்டிவ் PCR சான்றிதழை வைத்திருக்கவேண்டும் என்ற விதிமுறையில் இருந்து இந்த சிறப்பு அந்தஸ்து கொண்டவர்களுக்கு விலக்கு அளிக்கப்படும்.

யாருக்கெல்லாம் சிறப்பு அந்தஸ்து உண்டு?

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் தன்னார்வலர்களுடைய AlHosn ஆப்பில் தங்க நிறத்திலான நட்சத்திரம் திரையில் தோன்றும்.

தடுப்பூசி எடுத்துக்கொண்ட தனிநபர்களுடைய AlHosn ஆப்பில் E என்ற எழுத்து திரையில் தோன்றும்.

அதன்படி, கொரோனா தடுப்பூசி ஆய்வில் தன்னார்வலர்களாக பங்கேற்று கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டவர்கள், ஆய்விற்கு உட்பட்டு அனைத்து பரிசோதனைகளையும் மேற்கொண்டிருக்க வேண்டும். அப்படியானால் மட்டுமே சிறப்பு அந்தஸ்து (தங்க நட்சத்திரம்) AlHosn அப்ளிகேஷன் திரையில் தொடரும்.

தேசிய தடுப்பூசித் திட்டத்தின் அடிப்படையில் தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்கள் ஒவ்வொரு வாரமும் PCR பரிசோதனை எடுத்துக்கொண்டால் மட்டுமே ஸ்டேட்டஸ் AlHosn அப்ளிகேஷனில் இருக்கும். ஏழு நாட்களுக்கு மட்டுமே, அந்த ஸ்டேட்டஸ் நீடிக்கும். மீண்டும் தோன்றவேண்டுமானால் மீண்டும் PCR பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும்.

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அபுதாபிக்குள் நுழைபவர்களுக்கு கொரோனா இருக்கிறதா எனப் பரிசோதனை செய்யும் திட்டம் கடந்தாண்டு மே முதல் நடைமுறையில் இருந்துவருவது குறிப்பிடத்தக்கது.

Coronavirus PCR test
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap