UAE Tamil Web

அபுதாபி: தனியார் பள்ளிகள் இந்தாண்டு கல்விக்கட்டணத்தை உயர்த்தக்கூடாது – எச்சரித்த அரசு..!

schools abudhabi

அபுதாபியில் உள்ள தனியார் பள்ளிகள் 2021-2022 கல்வியாண்டில் கல்விக் கட்டணத்தை அதிகரிக்க அனுமதியில்லை என அபுதாபி கல்வி மற்றும் அறிவுத்துறை (Adek) தெரிவித்திருக்கிறது.

சில தனியார் பள்ளிகள் இந்தாண்டு கல்விக் கட்டணத்தை உயர்த்த அனுமதி கோரியதாகவும், ஆனால் Adek அதனை நிராகரித்ததாகவும் அரேபிய தினசரியான அல் இத்திஹாட் செய்தி வெளியிட்டுள்ளது. Adek இதனை உறுதிப்படுத்தியுள்ளது.

அபுதாபியில் மொத்தம் 222 பள்ளிகள் மற்றும் 230 நர்சரிகளில் 250,000 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இங்கு 14 வகையான பாடத்திட்டங்கள் கற்பிக்கப்படுகின்றன. கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டு கடந்த மாதம் 30 மாணவர்களுடன் வகுப்பறைகளில் பாடம் கற்பிக்க அனுமதியளிக்கப்பட்டது. சீரான இடைவெளியில் ஆய்வுகளுடன் அபுதாபி முழுவதிலும் உள்ள பள்ளிகளைத் திறக்க பிப்ரவரி 20 ஆம் தேதி Adek ஒப்புதல் அளித்தது.

பிப்ரவரி 21 ஆம் தேதிவரையில், 221 பள்ளிகள் மற்றும் 119 நர்சரிக்களில் கொரோனா முன்னெச்சரிக்கை ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

schools abudhabi
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap