UAE Tamil Web

உலகம் முழுவதிலுமிருந்து அபுதாபிக்கு அனுப்பப்படும் 10,000 கொரோனா மாதிரிகள் : 24 மணிநேரத்தில் பரிசோதனை முடிவுகளை வெளியிட்டு அசத்தும் அபுதாபி சுகாதாரத்துறை..!

corona test

உலகளவில் கொரோனா வைரஸ் பரவுதலைத் தவிர்க்கும் நோக்கில் அபுதாபி சுகாதாரத்துறை வெளிநாடுகளில் இருந்து அபுதாபிக்கு வரும் 10,000 கொரோனா மாதிரிகளை பரிசோதனை செய்து 24 மணிநேரத்தில் முடிவுகளை வெளியிடுகிறது.

இதுகுறித்து அபுதாபி ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில்,” உலகத்தரமான பரிசோதனை வசதிகளின் மூலமாக, உலகமெங்கிலும் இருந்து வரும் PCR பரிசோதனை மாதிரிகளை உலகத்தரம் வாய்ந்த ஆய்வகங்களில் பரிசோதனைக்கு உட்படுத்திவருகிறது அபுதாபி சுகாதாரத்துறை” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அபுதாபி சுகாதாரத்துறையின் மேற்பார்வையில் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. எதிஹாட் ஏர்வேஸ், அஜிலிட்டி அபுதாபி மற்றும் யூனி லேப்ஸ் ஆகியவற்றின் உதவியுடன் உலகம் முழுவதிலும் இருந்து வரும் 5000 முதல் 10,000 கொரோனா மாதிரிகளை ஆய்வு செய்து 24 மணிநேரத்தில் ஆய்வு செய்து முடிவுகளை வெளியிடப்பட்டு வருகின்றன.

கொரோனா பரிசோதனைகளுக்காக 22 பிரத்யேக ஆய்வகங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் தினந்தோறும் 170,000 கொரோனா மாதிரிகளை ஆய்வு செய்து 4 மணி நேரத்தில் முடிவுகளை அறிவிக்க முடியும்.

corona test
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap