கொரோனா பாதிப்பு மீண்டும் உயர்ந்து வரும் வேளையில் அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை (DCT Abu Dhabi) அமீரகத்தின் பாதுகாப்பையும் ஆரோக்கியத்தையும் வலுப்படுத்தும் நோக்கில் புதிய அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
கிரீன் நாடுகள் என்று அழைக்கப்படும் நாடுகள்/பிராந்தியங்கள்/யூனியன் பிரதேசங்களின் புதுப்பிக்கப்பட்ட பட்டியலை DCT Abu Dhabi நேற்று வெளியிட்டுள்ளது.
இந்த கிரீன் பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகள்/பிராந்தியம்/யூனியன் பிரதேசங்களில் இருந்து வருபவர்கள் (அந்நாடுகளில் குடியுரிமை பெற்றவர்கள் அல்ல) அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதும் PCR பரிசோதனை செய்துகொண்டால் போதுமானது. அவர்கள் கட்டாய குவாரண்டைன் இருக்கத் தேவையில்லை.
புதுப்பிக்கப்பட்ட கிரீன் நாடுகளின் பட்டியல்:
- ஆஸ்திரேலியா
- பூட்டான்
- புருனே
- சீனா
- கிரீன்லாந்து
- ஹாங்காங் (SAR)
- ஐஸ்லாந்து
- மொரீஷியஸ்
- மங்கோலியா
- நியூசிலாந்து
- சவுதி அரேபியா
- சிங்கப்பூர்