UAE Tamil Web

அபுதாபி: கோவிட்-19 தடுப்பூசியை வழங்கும் 34 தனியார் மருத்துவ மையங்கள்.! வரிசையில் காத்திருக்கும் குடியிருப்பாளர்கள்..

covid19

நாட்டின் பல பகுதிகளிலும் குடியிருப்பாளர்களுக்கு கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்து செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

- Advertisment -

தலைநகர் அபுதாபியில் தனியார் மருத்துவ நிறுவனங்கள் இப்போது குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசியை வழங்குகின்றன. NMC ஹெல்த்கேர் குரூப் அபுதாபி, அல் அய்ன் மற்றும் ருவாய்ஸில் உள்ள 16 மருத்துவ வசதிகளில் சினோஃபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸை மக்களுக்கு வழங்க தொடங்கியுள்ளது.

VPS ஹெல்த்கேரின் 18 மருத்துவமனைகள் ஏற்கனவே தொற்றுக்கு எதிரான தடுப்பூசியை மக்களுக்கு வழங்கி வருகின்றன. இதனை அடுத்து அபுதாபியில் மொத்தமாக சுமார் 34 தனியார் மருத்துவ மையங்கள் இப்போது தடுப்பூசியை வழங்குகின்றன.

இது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள NMC ஹெல்த்கேர் செய்தித் தொடர்பாளர் ஒருவர், அபுதாபியில் உள்ள எங்களது 16 மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களில் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசியை பெற மக்கள் மக்கள் எங்களது மையங்களுக்கு ஆர்வமாக வரத் தொடங்கியுள்ளனர். தினசரி நூற்றுக்கணக்கான குடியிருப்பாளர்களுக்கு தடுப்பூசி போடும் திறன் எங்கள் குழுவிற்கு இருப்பதால் அனைவரையும் வரவேற்க நாங்கள் முழுமையாக தயாராக உள்ளோம் என்றார்.

பொது அறுவை சிகிச்சை மருத்துவ இயக்குநர் மற்றும் நிபுணருமான டாக்டர் ரம்ஸி அல்ஷைபா, தடுப்பூசியை பெற வந்துள்ள மக்கள் எண்ணிக்கையை பார்த்து தான் ஆச்சரியப்படுவதாக கூறினார். நோயாளிகளிடமிருந்து தடுப்பூசிகள் குறித்து பல கேள்விகள் கேட்கப்பட்டன.தடுப்பூசி திட்டத்தில் பங்கேற்க குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் மிகவும் ஆர்வமாக இருகின்றனர். கோவிட் -19 தடுப்பூசிகளை அனைத்து மருத்துவமனைகளிலும் கிடைக்கச் செய்வதில் சிறந்த முயற்சிகளுக்கு அபுதாபி சுகாதாரத் துறைக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம் என்றார்.

மேலும் பேசிய அவர், NMC ஹெல்த்கேர் சிறப்புப் பயிற்சி பெற்ற பகுதிகள் மற்றும் அர்ப்பணிப்புள்ள நிபுணர்களைக் கொண்டுள்ளது. தடுப்பூசிக்கு முந்தைய ஆலோசனை மற்றும் காகித வேலைகளுக்காக பயிற்சி பெற்ற ஊழியர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட பகுதிகள் உள்ளன. மேலும் தடுப்பூசி செலுத்திய பிறகு சுமார் 15 முதல் 30 நிமிடங்கள் வரை கண்காணிக்கப்படும் என்றார்.மருத்துவமனைகளின் கால் சென்டரை அழைப்பதன் மூலம் தடுப்பொசியை போட்டு கொள்வதற்காக அப்பாயின்மென்ட் வாங்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

சினோஃபார்ம் தடுப்பூசியின் செயல்திறன் விகிதங்கள் 90%-க்கு அருகில் இருப்பதால், தடுப்பூசிகள் அனைத்து வயதினருக்கும் பாதுகாப்பை வழங்கும். முன்கள பணியாளர்கள் முதல் வயதான நோயாளிகள் மற்றும் பிற நோயுற்ற மருத்துவ நிலைமைகள் உள்ளவர்களுக்கு சிறந்த பலனை அளிக்கும் என்றும் கூறியுள்ளார்.