சாலையில் வாகனம் ஓட்டிச் செல்பவர்கள் சக சாலை உபயோகிப்பாளர்களை மதித்து செயல்படவேண்டும் எனவும் முன்னறிவிப்பு இல்லாமல் செல்லும் திசையை மாற்றக்கூடாது எனவும் அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.
அதேபோல, ஒரு லேனில் இருந்து மற்றொன்றுக்கு செல்கையில் சைகை காட்ட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
முன்னறிவிப்பு இல்லாமல் வாகனம் செல்லும் திசையை மாற்றுபவர்களுக்கு 1000 திர்ஹம்ஸ் அபராதம் மற்றும் 4 கரும்புள்ளிகள் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரித்துள்ளது.
அதுமட்டுமல்லாமல் வாகனம் சிறைபிடிக்கப்படும். வாகனத்தை மீட்க 5000 திர்ஹம்ஸ் அபராதம் செலுத்தவேண்டும். மேலும் 3 மாதத்திற்குள் வாகனத்தை மீட்கவில்லையெனில் வாகனமானது ஏலத்தில் விடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.