UAE Tamil Web

அபுதாபி: புத்தாண்டை முன்னிட்டு கூட்டங்கள், நிகழ்ச்சிகள் நடத்தினால் 10,000 அபராதம் – எச்சரிக்கும் காவல்துறை..!

NYE parties in Abu Dhabi

புத்தாண்டு மலர இருப்பதை முன்னிட்டு மக்கள் தங்களது வீடுகளில் அல்லது பொது மற்றும் தனியார் இடங்களில் பார்ட்டிகளை நடத்தக்கூடாது எனவும் அவ்வாறு நடத்தினால் 10,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கவனமுடன் பின்பற்றவேண்டும் என அபுதாபி காவல்துறை வலியுறுத்தியுள்ளது.

2020 ஆம் ஆண்டின் தீர்ப்பாயம் எண் 38ன் படி, கூட்டங்கள், தனியார் மற்றும் பொது இடங்களில் கொண்டாட்ட விழாக்களுக்கு அழைப்பவர்கள் மற்றும் நடத்துபவர்களுக்கு 10,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். அதுமட்டுமல்லாமல் இதுபோன்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் நபர்களுக்கு தலா 5,000 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.

மத்திய செயல்பாட்டுத் துறையின் இயக்குனர் பிரிகேடியர் அகமது சைஃப் அல் முஹைரி (Ahmed Saif Al Muhairi) இதுகுறித்துப் பேசுகையில்,”புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த ஒருங்கிணைந்த பாதுகாப்புத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது” என்றார்.

பொதுமக்கள் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைபிடித்தல் போன்ற கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளுமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

புத்தாண்டை முன்னிட்டு அல் வத்பா பகுதியில் பிரம்மாண்ட வான வேடிக்கைகள் நிகழ்த்தப்பட இருக்கின்றன. 2 கின்னஸ் சாதனைகளை முறியடிக்க இருக்கும் இந்த வான வேடிக்கை குறித்து தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

NYE parties in Abu Dhabi
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap