UAE Tamil Web

மூளை அறுவை சிகிச்சையின் போது 4 மணிநேரம் விழித்திருந்த எமிராட்டி பெண்.! சிக்கலான பகுதியில் இருந்த கட்டியை வெற்றிகரமாக அகற்றிய அபுதாபி மருத்துவர்கள்..

emirati

மூளை அறுவை சிகிச்சையின் போது சுமார் 4 மணிநேரம் விழித்திருந்த ஒரு எமிராட்டி பெண் தற்போது நன்றாக குணமடைந்து வருகிறார்.

- Advertisment -

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கடினமான அறுவை சிகிச்சை மூலம் அவருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் சரியாகி உள்ளன. பள்ளி பஸ் சூப்ரவைசரான சல்ஹா அல் தஹேரியின் மூளையில் மெதுவாக வளர்ந்து வரும் கட்டி இருந்தது. அது அவரது செயல்பாட்டில் பாதிப்புகளை ஏற்படுத்தியது.

கட்டியின் விளைவால் தலைச்சுற்றல் உள்ளிட்ட பல கோளாறுகளால் அவதிப்பட்டார் சல்ஹா. பேச்சு மற்றும் பிற திறன்களைக் கட்டுப்படுத்தும் மூளையின் முக்கியமான பகுதிகளுக்கு அருகிலிருந்த கட்டியை அகற்ற, அபுதாபின் கிளீவ்லேண்ட் கிளினிக்கின் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் நோயாளி விழித்திருக்கும் போது நரம்பியல் அறுவை சிகிச்சையை செய்தனர்.

op3.pg

மூளையின் சரியான பகுதிக்கு சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய அறுவைசிகிச்சை முழுவதும் சல்ஹா விழிப்புடன் இருப்பது அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு அவசியமாக இருந்தது. எனவே அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் அவரிடம் கேள்விகள் கேட்டு பேச்சு கொடுத்து கொண்டே இருந்தனர்.

மிகவும் சிறப்பு வாய்ந்த அறுவை சிகிச்சை முறையின் போது, ​​அவர் பொருள்களுக்கு பெயரிட்டார். வாக்கியங்களைப் படித்தார் மற்றும் 100 இலிருந்து பின்னோக்கி எண்ணினார். இதை பற்றி கூறியுள்ள 31 வயதான சல்ஹா, ஒருபக்கம் மருத்துவர்கள் எனக்கு அறுவை சிகிச்சை செய்த போது, விழித்து கொண்டே கேள்விகளுக்கு பதிலளித்தது ஒரு வினோதமான அனுபவமாக இருந்தது. அறுவை சிகிச்சையின் போது எனது மூளை திசு எந்த வலியையும் உணரவில்லை என்று கூறியுள்ளார்.

op1

மேலும் பேசியுள்ள சல்ஹா, இப்போது தலைச்சுற்றல் மற்றும் பிற பாதிப்புகளில் இருந்து நான் மீண்டுள்ளேன். இந்த அதிசயத்திற்கு மருத்துவர்களுக்கு நன்றி என்ற சொல் போதாது. விரைவில் நான் எனது வழக்கமான பணிகளுக்கு திரும்ப முடியும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளேன் என்றார்.

இந்த சிக்கலான அறுவை சிகிச்சை பற்றி கூறியுள்ள மருத்துவர்கள், இதன் மூலம் பார்வை, பேச்சு மற்றும் இயக்கத்தை பாதிக்கும் மூளையின் செயல்பாட்டு பகுதிகளுக்கு சேதம் விளைவிக்கும் அபாயத்தை குறைத்துள்ளோம். அறுவை சிகிச்சையைத் திட்டமிட தங்களுக்கு உதவ சல்ஹாவின் மூளை மற்றும் கட்டியின் 3 டி அச்சிடப்பட்ட மாதிரி பயன்படுத்தப்பட்டது. ஏனெனில் கட்டி மொழி மற்றும் மூளையின் மோட்டார் கார்டெக்சுக்கு மிக அருகில் அமைந்திருந்தது.

op2

நாங்கள் மூளையை நெருங்கியதால் அவர் மயக்கமடைந்தார். பின்னர் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் மூலம் கட்டியை அகற்றப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே வலதுபுறத்தில் கட்டி இருந்து அகற்றும் சூழல் வந்திருந்தால் நோயாளியை தூக்க நிலையில் வைத்து அறுவை சிகிச்சை செய்திருப்போம். ஏனெனில் மொழி இழப்பு ஏற்படும் ஆபத்து இருக்காது, எனவே நோயாளி விழித்திருக்க தேவையில்லை.

ஆனால் நோயாளி விழித்திருக்கும்போது மட்டுமே மொழி, பேச்சு மற்றும் உயர் அறிவாற்றல் செயல்பாடுகளை சோதிக்க முடியும். எனவே தான் சல்ஹாவை விழிப்பு நிலையில் வைத்து அறுவை சிகிச்சை மேற்கொண்டோம் என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.