UAE Tamil Web

அபுதாபியில் புதிதாக 4 பூங்காக்கள் திறப்பு – மக்கள் மகிழ்ச்சி..!

Pocket-park

அபுதாபியின் ஷக்போட் நகரின் புற நகர் பகுதியில் புதிதாக 4 சிறிய பூங்காக்களை அமைத்திருக்கிறது அபுதாபி நகராட்சி. மக்களின் ஓய்விடங்களுக்கான தேவையை இவை பூர்த்தி செய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

24,575 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பூங்கா உருவாக்கத்திற்கு 15.3 மில்லியன் திர்ஹம்ஸ் தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. புற நகர் பகுதி மக்களின் சவுகரியத்திற்காக விளையாட்டு பகுதிகள், விளையாட்டு உபகரணங்கள், அமரும் இடங்கள், பார்பேக்கியூ இடங்கள், பசுமையான பகுதிகள் மற்றும் வண்ண விளக்குகள் ஆகியவை இங்கே இடம்பெற்றிருக்கின்றன.

ஷக்போட் நகரத்தில் மக்களின் நன்மைக்காக இதுபோன்ற பூங்காக்கள் எதிர்காலத்தில் திறக்கப்படும் என நகராட்சி தெரிவித்திருக்கிறது.