31.4 C
Dubai
October 22, 2020
UAE Tamil Web

கோவிட்-19 பரிசோதனை கட்டணத்திலிருந்து மதத்தலைவர்களுக்கு முழு விலக்கு.. அபுதாபி அறிவிப்பு

free

கொரோனா தொற்றுக்கு இடையிலும் பாதுகாப்பான முறையில் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் முயற்சிகளை அமீரகம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இந்நிலையில் அபுதாபியில் மதத்தலைவர்களுக்கு கோவிட் -19 பரிசோதனைகள், கட்டணமின்றி இனி இலவசமாக செய்யப்படும் என்று உள்ளூர் அதிகாரிகளால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண விலக்கு அபுதாபியில் உள்ள வழிபாட்டுத் தலங்களை மீண்டும் திறக்க கூறப்பட்ட வழிகாட்டுதலின் ஒரு பகுதியாகும் என்று அபுதாபி அரசு ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள ட்வீட் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.

சமூக உறுப்பினர்கள் மற்றும் வழிபாட்டாளர்களின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாக சமூக மேம்பாட்டுத் துறையானது, அபுதாபியில் உள்ள மதத்தலைவர்களுக்கு கொரோனா சோதனைக் கட்டணத்திலிருந்து விலக்கு அளித்துள்ளதாகவும் அந்த ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஜூலை முதல் வழிபாட்டிற்காக மசூதிகள் மீண்டும் திறக்கப்பட்டன. அபுதாபியிலுள்ள தேவாலயங்கள் மற்றும் பிற முஸ்லிம் அல்லாத அனைத்து வழிபாட்டுத் தலங்களும் செப்டம்பர் முதல் மீண்டும் திறக்கப்பட்டன.

அனைத்து வழிபாட்டு தலங்களும் அதன் திறனில் 30% வரை மட்டுமே பக்தர்களை அனுமதிக்க வேண்டும் என்று சமூக மேம்பாட்டுத் துறை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. தொற்று பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் கடைபிடிக்குமாறு வழிபாட்டாளர்கள் மற்றும் பணியாளர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



error: Alert: Content is protected !!