UAE Tamil Web

முகமது நபி (ஸல்) அவர்களின் பிறந்தநாள் : இலவச பார்க்கிங் திட்டம் அறிவிப்பு..!

parking

அபுதாபி: வரும் வியாழக்கிழமை (அக்டோபர் 29) முகமது நபி அவர்களின் பிறந்தநாள் கொண்டாடப்பட இருக்கிறது. இதனையடுத்து மக்கள் பொது பார்க்கிங் இடங்களில் தங்களது வாகனங்களை இலவசமாக நிறுத்திக்கொள்ளலாம் என அபுதாபி நகராட்சியின் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) தெரிவித்திருக்கிறது.

- Advertisment -

29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி காலை 7.59 மணி வரையில் இந்த இலவச பார்க்கிங் திட்டம் நடைமுறையில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் மவாகிஃப் விதிமுறைகளைப் (Mawaqif regulations) பின்பற்ற வேண்டும் எனவும், தடை செய்யப்பட்ட இடங்களிலோ அல்லது போக்குரவரத்திற்கு இடையூறு செய்யும் வகையிலோ மக்கள் தங்களது வாகனங்களை நிறுத்தக்கூடாது எனவும் ITC தெரிவித்துள்ளது.

குடியிருப்பு வளாகங்களில் இருக்கும் பார்க்கிங் பகுதிகளை இரவு 9 மணிமுதல் காலை 8 மணி வரையில் பிற வாகனவோட்டிகள் பயன்படுத்தக்கூடாது என ITC நினைவுறுத்தியிருக்கிறது. குடியிருப்பாளர்களுக்கென ஒதுக்கப்பட்ட இடங்களில் பிற வாகனவோட்டிகள் தங்களது கார்களை பார்க்கிங் செய்தால் 200 திர்ஹம்ஸ் அபராதமாக விதிக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

பார்க்கிங் டிக்கெட் வழங்கப்பட்ட நான்கு மணி நேரத்திற்குப் பிறகு நிறுத்தப்படும் எந்த வாகனங்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படும் என ITC தெரிவித்திருக்கிறது.