UAE Tamil Web

கின்னஸ் ரெக்கார்டில் இடம்பிடித்த அபுதாபி மினா பிளாசா டவர்ஸ் இடிப்பு நிகழ்வு.! அபுதாபி ஊடக அலுவலகம் ட்வீட்

towers

அபுதாபியில் இன்று காலை பத்தே வினாடிகளில் தரைமட்டமாக்கப்பட்ட மினா பிளாசா டவர்கள் இடிப்பு பணியை மேற்கொண்டதை அடுத்து, மோடன் ரியல் எஸ்டேட்(Modon Real Estate) புதிய உலக சாதனை படைத்துள்ளதாக அபுதாபி ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisment -

மினா சயீத் பகுதியை மீளுருவாக்கம் செய்யும் திட்டத்தின் இரண்டாம் கட்டமாக மினா பிளாசாவின் 4 டவர்களை மோடன் ப்ராபர்டீஸ் நிறுவனம், இன்று காலை வெடி பொருட்களை வைத்து 10 வினாடிகளில் தகர்த்தது. இதற்காக சுமார் 6,000 கிலோ வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டன. (இது தொடர்பான விரிவான தகவல்களை பெற இங்கே கிளிக் செய்யவும்)

165 மீட்டர் உயரமும் 144 தளங்களையும் கொண்ட மினா பிளாசா டவர்களை, மோடன் ப்ராபர்டீஸ் நிறுவனம் வெற்றிகரமாக தகர்த்தது. இதனை அடுத்து “வெடிபொருட்களைப் பயன்படுத்தி இடிக்கப்பட்ட மிக உயரமான கட்டிடம்” (controlled demolition-கட்டுப்படுத்தப்பட்ட இடிப்பு) என்ற ஒரு புதிய கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளதாக அபுதாபி ஊடக அலுவலகம் வெளியிட்டுள்ள ட்வீட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் மூலம் 165 மீட்டர் உயரமுள்ள 144 தளங்களை இடித்தது, வெடிபொருட்களால் இடிக்கப்பட்ட மிக உயரமான கட்டிடமாக, தற்போது கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.