UAE Tamil Web

அபுதாபி ஸ்ப்ரிங் திட்டம்: இலவச ஹோட்டல் அறை மற்றும் உணவுகள்..!

Hotel

ஏப்ரல் 20 ஆம் தேதிவரையில் இருக்கும் அபுதாபி ஸ்ப்ரிங் திட்டத்தின் மூலம், பல்வேறு ஆஃபர்களை அரசு அளிக்க இருக்கிறது. அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறை ஒருங்கிணைக்கும் இத்திட்டத்தில் அபுதாபி முழுவதிலும் உள்ள 50 ஹோட்டல்கள் மற்றும் பல பானம் & உணவு மையங்கள் மற்றும் தங்கும் விடுதிகளும் இணைந்துள்ளன.

- Advertisment -

குடியிருப்பாளர்கள் மற்றும் விசிட்டிங் விசாவில் வந்தவர்கள் இந்திட்டத்தில் பங்கேற்கும் ஹோட்டல்களில் இரண்டு இரவுகளுக்கு பாதி விலையில் தங்குமிடம், காலை, மதிய மற்றும் இரவு உணவுகளைப் பெறும் வகையில் இத்திட்டமானது உருவாக்கப்பட்டுள்ளது. இரண்டாவது முறை அறை புக் செய்கையில், பாதி விலையிலும் 16 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாகவும் ஹோட்டலில் அறையானது ஒதுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

“அபுதாபியின் பன்முகத்தன்மை வாய்ந்த இடங்களை அமீரக மக்கள் மட்டுமல்லாது அனைவரும் கண்டுகளிக்கும் நோக்கில் இந்தத் திட்டம் அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலா துறையால் கொண்டுவரப்பட்டுள்ளது” என அபுதாபி கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறையின் சந்தைப்படுத்துதல் மற்றும் சுற்றுலாத்துறை மேலாளர் அலி ஹசன் அல் ஷபா தெரிவித்தார்.