UAE Tamil Web

அபுதாபி இந்துக்கோவில் அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் நிறைவடைய இருக்கிறது : கோவில் நிர்வாகம்..!

Temple

அபுதாபியில் கட்டப்பட்டுவரும் இந்துக் கோவிலின் அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் அடுத்தவாரம் நிறைவடைய இருப்பதாக கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அபு முரைகா பகுதியில் கட்டப்பட்டுவரும் கோவிலின் அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் ஏறக்குறைய முடிவடைந்துவிட்டதாகவும் தரையிலிருந்து 4.5 மீட்டர் உயரம் வரையிலும் கோவிலின் அஸ்திவாரம் எழுந்துள்ளதாகவும் அபுதாபி BAPS இந்து கோவில் நிர்வாகத்தின் திட்டப் பொறியாளர் தெரிவித்துள்ளார்.

“நான் இந்தப் பணிகளின் தரத்தையும், முன்னேற்றத்தையும் கண்காணித்துவருகிறேன். இப்பணியில் நானும் இடம்பெற்றிருப்பது எனக்குக் கிடைத்த பாக்கியம் ஆகும். இது வாழ்வில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு. ஜனவரி முதல் 4,500 கனமீட்டர் கான்கிரீட் அமைத்துள்ளோம். தரைத் தளத்தினை மூடும் பணிகளுக்கு 3,000 கனமீட்டர் கான்கிரீட் போடப்பட்டுள்ளது. தரைப் பகுதியை மூடும் பணியானது அடுக்கடுக்காக நடைபெற்றிருக்கிறது. இப்பணிகளுக்கு இங்கு கிடைக்கும் மணலே பயன்படுத்தப்பட்டது. இதற்காக வெளியில் இருந்து மணல் இறக்குமதி செய்யப்படவில்லை” என கோவில் கட்டுமானப் பணியின் திட்டப் பொறியாளர் அசோக் கொண்டேடி தெரிவித்தார்.

temple
Image Credit: Khaleej Times

கோவிலின் அஸ்திவாரத்தில் இரண்டு சுரங்கங்கள் அமைக்கப்பட இருக்கின்றன. இதற்கான கற்கள் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகள் அடுத்தவாரம் முதல் துவங்க இருக்கின்றன. அஸ்திவாரம் அமைக்கும் பணிகள் அடுத்த மாதம் முழுமையாக முடிவடையும். மே மாதம் கற்கள் பதிக்கும் பணிகள் துவங்க இருக்கின்றன.

தளத்தில் இளஞ்சிவப்பு மற்றும் மார்பிள்கள் பதக்கப்பட இருக்கின்றன. இந்தக் கோவிலில் வைக்கப்பட இருக்கும் சிற்பங்கள் இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தில் செதுக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கோவிலின் சிறப்பம்சங்கள் குறித்து மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.

Temple
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap