அமீரக தலைநகரான அபுதாபியில் பிரம்மாண்ட இந்துக் கோவில் ஒன்று கட்டப்பட்டு வருகிறது. சமீபத்தில் இந்தக் கோவிலில் கான்கிரீட் போடும் பணிகள் நடைபெற்றன. அதில் BAPS அமைப்பைச் சேர்ந்த உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். கட்டுமானப் பணிகள் முழுவேகத்தில் நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் 3 மீட்டர் வரை கட்டிடத்தின் அடித்தளம் போடப்பட்டிருப்பதாகவும் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
இந்து மரபின் அடிப்படையில் கட்டப்பட்டுவரும் இந்த கோவிலின் அடிக்கல் நாட்டுவிழா 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி நடைபெற்றது. திரு.நரேந்திர மோடி அவர்கள் காணொளிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டி புதிய வரலாற்றுக்கு முன்னுரை எழுதினார். வரும் 2023 ஆம் ஆண்டில் இந்தப் பிரம்மாண்ட கோவிலின் கட்டுமானப்பணிகள் நிறைவடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோவிலில் இடம்பெறும் பிரம்மாண்ட சிற்பங்கள், சந்நதிகள் போன்ற பல தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.
இந்நிலையில் கோவில் கட்டுமானப்பணிகள் நடைபெறும் புகைப்படங்களை கலீஜ் டைம்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. அவற்றைக் கீழே காணலாம்.





