UAE Tamil Web

அபுதாபி: வானில் தோன்றிய மர்ம வெளிச்சம் : உறுதிப்படுத்திய சர்வதேச வானியல் மையம்..!

Fireball

அபுதாபியில் நேற்று மாலை 6.32 மணியளவில் திடீரென மர்ம வெளிச்சம் ஒன்று வானில் தோன்றியது. இதனை சர்வதேச வானியல் மையமும் (International Astronomy Centre) உறுதிப்படுத்தியிருக்கிறது.

ISC ன் அமீரக விண்கல் கண்காணிப்பு அமைப்பினால் இது படம் எடுக்கப்பட்டிருக்கிறது. மிகவும் வெளிச்சமான விண்கல் ஒன்று பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்தபோது ஏற்பட்ட வெளிச்சம் தான் அது என ISC தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்துப் பேசிய ISC ன் தலைமை இயக்குனர் முகமது ஷவ்கத்,” மணிக்கு 67,000 கிலோமீட்டர் வேகத்தில் விண்கல் பூமியின் வளிமண்டலத்திற்குள் நுழைந்திருக்கிறது. அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து அமீரகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அதிதிறன் வாய்ந்த கேமராக்களால் இந்த விண்கல் படம் பிடிக்கப்பட்டிருக்கிறது”

“வானத்தில் ஏதேனும் விண்கல் தெரிந்தால் இந்தக் கேமராக்கள் அதை தாமாகவே படம் பிடித்து அதனை, எந்த நிலையத்தோடு அந்த கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளதோ அந்த நிலையத்திற்கு அனுப்பும். அந்த காட்சிகள்/புகைப்படங்கள் உடனடியாக அபுதாபிக்கு அனுப்பப்படும்” என்றார்.

Fireball
0 Shares
Share via
Copy link