அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அன்னையர் தினத்தினை முன்னிட்டு நேற்று தனது அம்மாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தினை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அல் நஹ்யான தனது தாயும் பொது மகளிர் சங்கத்தின் (GWU) தலைவரும், தாய்மை மற்றும் குழந்தைப்பருவத்திற்கான உச்ச கவுன்சிலின் தலைவரும், குடும்ப மேம்பாட்டு அறக்கட்டளையின் உச்ச தலைவருமான பெருமதிப்பிற்குரிய ஷேக்கா ஃபாத்திமா பின்ட் முபாரக் அவர்களுடன் இருக்கும் புகைப்படத்தை தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
To my beloved mother, Fatima bint Mubarak, and to every mother around the world. You are the universal symbol of hope, love and compassion. We celebrate you today, and every day. pic.twitter.com/PyLDFO5r2l
— محمد بن زايد (@MohamedBinZayed) March 21, 2021
அதில்,”அன்புள்ள அம்மா பின்ட் முபாரக் மற்றும் உலகத்திலுள்ள அனைத்து தாய்மார்களுக்கும், நம்பிக்கை, அன்பு, தியாகத்தின் பிரபஞ்ச சின்னம் நீங்கள் தான். இன்று மட்டுமல்ல.. எல்லா தினமுமே நாங்கள் உங்களைக் கொண்டாடுவோம்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
அன்னையர் தினத்தினை முன்னிட்டு முன்னதாக அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவொன்றினை வெளியிட்டிருந்தார். அதுகுறித்து தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.