நாளை முதல் நான்கு நாட்களுக்கு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் சாலையின் (E12) ஒரு பகுதி மூடப்படுவதாக அபுதாபி ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) இன்று தெரிவித்திருக்கிறது.
இதுகுறித்து ட்விட்டரில், நாளை ஜனவரி 7 (வியாழக்கிழமை) முதல் ஜனவரி 10 (ஞாயிற்றுக்கிழமை) வரையில் சாலையின் ஒரு பகுதி மூடப்படும் என ITC தெரிவித்திருக்கிறது.
இரண்டு நாளைக்கு சாலையின் இரண்டு லேன்கள் என்ற வீதத்தில் சாலை மூடப்பட இருக்கிறது. ஆகவே, வாகனவோட்டிகள் கவனமாக வாகனங்களை இயக்குமாறு ITC அறிவுறுத்தியிருக்கிறது.
சாலைகள் மூடப்படும் வரைபடத்தை ITC தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
إغلاق جزئي على طريق الشيخ خليفة بن زايد آل نهيان E12.
Partial Road Closure on Sheikh Khalifa Bin Zayed Al Nahyan Road E12. pic.twitter.com/gh7gqSBrBF— “ITC” مركز النقل المتكامل (@ITCAbuDhabi) January 6, 2021