UAE Tamil Web

போலீஸ் சீருடையில் பிறந்த நாளை கொண்டாட ஆசைப்பட்ட வெளிநாட்டு சிறுவன்.! மிகச்சிறந்த பிறந்த நாள் பரிசளித்த அபுதாபி போலீஸ் (நெகிழ வைக்கும் வீடியோ)

syrianboy

தேசிய தின கொண்டாட்டத்தையொட்டிய பல இனிய நிகழ்வுகளில் ஒரு சிறுவனுக்கு காவல் அதிகாரிகள் கொடுத்த பிறந்த நாள் பரிசானது பலரது கவனத்தையும், பாராட்டையும் பெற்றுள்ளது.

- Advertisment -

அல் சயீத் என்ற சிரியாவை சேர்ந்த சிறுவன் போலீஸாக மாறி தனது பிறந்த நாளை காவல் நிலையத்தில் கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளான். தனது இந்த விருப்பம் குறித்து தந்தையிடம் ஆர்வமாக தெரிவித்துள்ளான். இதனை அறிந்த அபுதாபி காவல்துறை சிறுவனின் விருப்பத்தை நிறைவேற்றி வைத்துள்ளது.

சிறுவன் அல் சயீத்தின் ஆசையை நிறைவேற்ற சரியாக அவனது பிறந்த நாளன்று போலீஸ் ரோந்து வாகனத்தை அவர்களது வீட்டிற்கு அனுப்பி அவனையும், அவனது தந்தையையும் காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர் அதிகாரிகள். ஏற்கனவே அவனுக்கு அளிக்கப்பட்டிருந்த காவல்துறை சீருடையை அணிந்து கொண்ட சிறுவன், தன்னை அழைத்து போக வந்த காவல் அதிகாரிகளுக்கு சல்யூட் செய்து விட்டு, தந்தையுடன் போலீஸ் வாகனத்தில் மிடுக்காக ஏறி கொண்டான்.

ரோந்து வாகனத்தில் அழைத்து செல்லப்படும் போது காவலர் சீருடையுடன் இருந்த சிறுவன் அருகிலிருந்த பெண் அதிகாரியுடன் உற்சாகமாக பேசி கொண்டே சென்றான். பின் அல் அய்ன் போலீஸ் இயக்குநரகத்தில் நிதி மற்றும் செயல்பாடுகளுக்கான துணை இயக்குநர் கர்னல் முகமது ஹம்தான் அல் மந்தாரி காவல் நிலையத்தில் சயீத் மற்றும் அவரது தந்தையை வரவேற்றார்.

அங்கு சென்ற சிறுவனுக்கு காவல்நிலையத்தை அதிகாரிகள் சுற்றி காண்பித்தனர். நிலையத்தை சுற்றி பார்த்த சிறுவன், அங்கு பல புகைப்படங்களையும் எடுத்து கொண்டான். சிறுவன் சயீத்தை போலீசார் பிறந்தநாள் கேக் வெட்ட செய்தனர் மற்றும் பரிசுளையும் வழங்கி குதூகலப்படுத்தினர். தனது ஆசையை நிறைவேற்றிய அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினான் சயீத்.

சிறுவன் சயீத்திற்கு இந்த ஆண்டு பிறந்த நாளை, வாழ்வில் மிக சிறந்த நாளில் ஒன்றாக மாற்றி தந்துள்ளது அபுதாபி போலீஸ்.