UAE Tamil Web

அபுதாபி: பாஸ்போர்ட் சேவைகள் தொடர்பாக முக்கிய அறிவிப்பை வெளியிட்ட இந்திய தூதரகம்..

passport

ஏற்கனவே காலாதியான பாஸ்போர்ட் / அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் அல்லது ஜனவரி 31-க்குள் காலாவதியாகும் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களின் புதுப்பித்தல் விண்ணப்பங்கள்(renewal applications) மட்டுமே செயலாக்கப்படும்(process) என்று அபுதாபியில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. இது உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

- Advertisment -

டிசம்பர் 7-ம் தேதியிட்ட இம்முடிவு தொடர்பாக அடுத்த அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறையே அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவிட் -19 தொற்று பரவுவதைத் தடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒருவேளை அவசர பாஸ்போர்ட் சேவை தேவைப்படும் பட்சத்தில், விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்களை ஸ்கேன் செய்து cons.abudhabi@mea.gov.in என்ற மெயில் ஐடி-க்கு அனுப்ப வேண்டும். கூடவே விண்ணப்பதாரர்கள் தங்களது அவசரநிலை பற்றிய விவரங்களையும் தெளிவாக இ-மெயிலில் விளக்க வேண்டும்.

அவசர சேவையை நாடும் விண்ணப்பதரர்களின் அனைத்து இ-மெயில்களுக்கும் தூதரகம் விரைந்து பதிலளிக்கும் மற்றும் தேவைப்படும் தூதரக சேவை வழங்கப்படும் என்று இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது.

முன்னதாக கடந்த மாதம், இந்திய தூதரகம் ஊழியர்களின் சார்பாக நிறுவன PRO-க்கள் பல விண்ணப்பங்களை வழங்க மற்றும் திருத்தப்பட்ட விண்ணப்ப செயல்முறைகளை இந்திய பாஸ்போர்ட் மற்றும் விசா விண்ணப்பங்களுக்கான அவுட்சோர்ஸ் சேவை வழங்குநரான பி.எல்.எஸ் இன்டர்நேஷனல்(BLS International)-ல் செய்ய அனுமதிக்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.

மேற்கண்ட நடைமுறை அமலுக்கு வருவதற்கு முன் இந்திய வெளிநாட்டவர்கள் தங்கள் விண்ணப்பங்களை அருகிலுள்ள பி.எல்.எஸ் மையத்தில் தனிப்பட்ட முறையில் சமர்ப்பிக்க வேண்டும். தொற்று காலம் தனிநபர்களின் பயணங்களில் சிரமத்தை உருவாக்கியுள்ளதால், நிறுவன PRO-க்கள் விண்ணப்பங்களை செயலாக்க அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.