UAE Tamil Web

அமீரகம்: வாழ்நாள் முழுவதும் இலவசமாக மருத்துவம் பார்த்த 100 வயது பாரம்பரிய மருத்துவர் காலமானார் – அபுதாபி பட்டத்து இளவரசர் இரங்கல்…!

Sheikh-Mohamed-bin-Zayed-with-Emirati-veteran-Aqeeda-Ali-Al-Muhairi-

அமீரகத்தில் தனது வாழ்நாள் முழுவதும் இலவசமாக பொதுமக்களுக்கு பாரம்பரிய மருத்துவ முறையில் சிகிச்சை அளித்துவந்த அகீதா அலி அல் முஹைரி கடந்த சனிக்கிழமையன்று காலமானார். அவருக்கு வயது 100 ஆகும்.

இதனையடுத்து அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின்  சயீத் அல் நஹ்யான் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்திருக்கிறார்.

இளவரசர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” அமீரகம் தனது உண்மையான விசுவாசம் மிக்க புதல்வனை இழந்துவிட்டது. பல்லாண்டுகாலம் பொதுமக்களுக்கு சேவை செய்த அவருடைய மறைவினால் நீங்கா கவலையில் ஆழ்ந்திருக்கும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். இறைவன் அவருடைய ஆன்மாவிற்கு அமைதியைத் தரட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிறுவயதிலேயே தனது தந்தை மற்றும் தாயை இழந்த முஹைரி தனது பாட்டியிடம் இருந்து அமீரக பாரம்பரிய வைத்திய முறையைக் கற்றிருக்கிறார். அதற்கு முன்னர் முத்தெடுத்தல் போன்ற பல வேலைகளில் ஈடுபட்டுவந்த முஹைரி மருத்துவத்தினை பயின்ற பிறகு எளிய மக்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கத் துவங்கினார்.

சுமார் 50 க்கும் மேற்பட்ட நோய்களுக்கு அவர் தனது பாரம்பரிய மருத்துவத்தின் அடிப்படையில் சிகிச்சை அளித்தார். 70 வருடங்களுக்கும் மேலாக இலவசமாக சிகிச்சைகள் அளித்துவந்த முஹைரிக்கு கடந்த 2015 ஆம் ஆண்டு அதிசிறந்த தனிநபருக்கான விருது அளித்து அபுதாபி அரசு கவுரப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Sheikh-Mohamed-bin-Zayed-with-Emirati-veteran-Aqeeda-Ali-Al-Muhairi-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap