UAE Tamil Web

சாலையின் நடுவே நின்றுபோன வாகனம் ; ஓடிச்சென்று உதவிய காவல்துறை அதிகாரி – “இந்த மண்ணின் குணம் அது” என அபுதாபி இளவரசர் பாராட்டு..!

Sheikh Mohamed bin Zayed Al Nahyan

கடந்தவாரம் மிகவும் பரபரப்பான சாலையான ஷேக் முகமது பின் சயீத் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனம் ஒன்று திடீரென நின்றதால் அச்சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. சைன் அல் அபிதின் என்பவர் ஓட்டிச்சென்ற வாகனம் தான் பாதியில் நின்றது.

- Advertisment -

இதனைக் கண்ட போக்குவரத்து காவல்துறை அதிகாரி சார்ஜன்ட் அகமது ஹசன் அல் ஹம்மாடி உடனடியாக அவ்வாகனத்தை அப்புறப்படுத்தியதோடு, போக்குவரத்தையும் சீர்செய்திருக்கிறார். பிரேக் டவுன் ஆன வாகனத்துடன் சாலையில் தவித்த தனக்கு ஹம்மாடி தக்க நேரத்தில் உதவி செய்ததாக அபிதின் ரேடியோ ஒலிபரப்பு ஒன்றில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.

இதனையறிந்த அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதப்படையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஹம்மாடியை தனது ட்விட்டர் பதிவின் மூலமாகப் பாராட்டியிருக்கிறார்.

இளவரசர் தனது ட்விட்டர் பக்கத்தில்,” உதவி செய்வதும் நற்செயல்களை மேற்கொள்வதும் இந்த மண்ணின் தொன்றுதொட்ட பாரம்பரியமாகும். அபிதின் ஷார்ஜா காவல்துறையைச் சேர்ந்த ஹம்மாடியின் உதவியை நன்றியுடன் நினைவுகூர்ந்திருக்கிறார். இவர்கள் நம் ஆசிர்வதிக்கப்பட்ட பூமியின் அங்கமாவார்கள். நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். அவர்கள் மட்டுமல்லாது பிறருக்கு உதவிசெய்து இம்மண்ணின் மகத்துவத்தை வெளிப்படுத்தும் அனைவருக்கும் எனது நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.