UAE Tamil Web

பிற எமிரேட்டுகளிலிருந்து அபுதாபி வருவோர் கட்டாயம் இவற்றை காட்ட வேண்டும்.! அபுதாபி போலீஸ் வலியுறுத்தல்

abudhabi

பிற எமிரேட்டுகளில் இருந்து அபுதாபிக்கு வருவோர் காவல்துறை மற்றும் பிற அதிகாரிகளால் நிர்ணயிக்கப்பட்ட நடைமுறைகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகளை தவறாமல் பின்பற்ற போலீஸார் வலியுறுத்தியுள்ளனர்.

- Advertisment -

செக்யூரிட்டி பாயிண்ட்ஸ்களில்(security points) போக்குவரத்தை சீராக கொண்டு செல்லும் முயற்சியின் ஒரு பகுதியாக, பிற எமிரேட்டுகளில் இருந்து வருவோர் அபுதாபிக்குள் நுழையும்போது தங்களது எமிரேட்ஸ் ஐடி மற்றும் கோவிட்-19 நெகட்டிவ் முடிவை பெற்ற அனுமதி சான்றிதழ்களை காண்பிக்க வேண்டும் என்று அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.

அதே போல ஓட்டுநர்கள் சோதனை சாவடிகளில் தாங்கள் இயக்கி வரும் வாகனங்களுக்கு ஏற்ற பாதைகளை(lanes) பின்பற்ற வேண்டும். இதற்காக வெவ்வேறு வாகனங்களுக்கு வெவ்வேறு வண்ணங்களை கொண்ட அடையாள பலகைகள்(Signboards) வைக்கப்பட்டுள்ளன. அதன்படி அவசரகால வாகனங்களுக்கு சிவப்பு, கனரக வாகனங்களுக்கு நீலம் மற்றும் அபுதாபிக்குள் நுழைய அனுமதிக்கப்பட்ட வாகனங்களுக்கு பச்சை நிறங்களிலான சைன்போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

கொரோனாவிற்கு எதிரான போருக்கு உதவுவதில் சமூக உறுப்பினர்கள் ஒரு முக்கிய தூண் என்பதால், குடும்பங்களின் பாதுகாப்பு , முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு அறிவுறுத்தல்களுக்கு பொதுமக்கள் கட்டுப்பட வேண்டும் என்று அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.