UAE Tamil Web

அபுதாபி: இதுவரை இல்லாத அளவிற்கு குறைக்கப்பட்ட கொரோனா பரிசோதனைக்கான கட்டணம்..!

Coronavirus PCR test

அபுதாபியில் கொரோனா RT-PCR பரிசோதனைக்கான கட்டணத்தை 65 திர்ஹம்சாக குறைத்துள்ளதாக அபுதாபி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக அபிதாபியில் RT-PCR பரிசோதனைக்கு 85 திர்ஹம்ஸ் வசூலிக்கப்பட்டுவந்தது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அபுதாபியில் பணிபுரியும் குறிப்பிட்ட 5 துறைகளில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒருமுறையும் கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டிருந்தது.

இதுகுறித்து அபுதாபி சுகாதாரத்துறை வெளியிட்டிருந்த அறிக்கையில்,”ஒரு நபருக்கு கொரோனா பரிசோதனைக்கான மாதிரி சேகரித்தல் மற்றும் பரிசோதனைக்கு கட்டணமாக 65 திர்ஹம்ஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளது” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக ஹோட்டல்கள், உணவகங்கள், போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் சமூக மற்றும் தனிநபர் நடவடிக்கைகளான லாண்டரிகள், அழகு நிலையங்கள் மற்றும் சிகை அலங்கார மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்களுக்கு இந்நடைமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

Coronavirus PCR test
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap