UAE Tamil Web

அமீரகம் முழுவதும் இந்த 5 துறைகளில் பணிபுரிபவர்கள் 14 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கவேண்டும் – அரசின் புதிய உத்தரவு..!

uae,-covid,-coronavirus,-new-test,-pcr-

அமீரகத்தில் 5 துறைகளைச் சேர்ந்த பணியாளர்கள் 14 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுக்கவேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹோட்டல்கள், உணவகங்கள், போக்குவரத்து, சுகாதாரம் மற்றும் சமூக மற்றும் தனிநபர் நடவடிக்கைகளான லாண்டரிகள், அழகு நிலையங்கள் மற்றும் சிகை அலங்கார மையங்கள் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் 14 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா பரிசோதனை எடுத்துக்கொள்ளவேண்டும்.

கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் எடுத்துக்கொண்டவர்களுக்கு இந்நடைமுறையில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட 5 துறைகளைச் சேர்ந்த நிறுவனங்கள் தங்களது தொழிலாளர்களை கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வலியுறுத்துமாறு அமீரக மனிதவள மற்றும் ஏமிராட்டிசேஷன் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆணை வரும் மார்ச் 28 ஆம் தேதிமுதல் நடைமுறைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

uae,-covid,-coronavirus,-new-test,-pcr-
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap