UAE Tamil Web

அபுதாபி: டிரைவ் த்ரூ மையங்களிலும் இனி இலவச கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்..!

vaccine trial

அபுதாபியில் இனி டிரைவ் த்ரூ மையங்களிலும் இலவச கொரோனா தடுப்பூசி போடப்படும் என அபுதாபி சுகாதாரத்துறை தெரிவித்திருக்கிறது.

மார்ச் மாத இறுதிக்குள் அமீரக மக்கட்தொகையில் பாதிக்கும் மேற்பட்ட (தகுதியான நபர்களுக்கு) மக்களுக்கு கொரோனா தடுப்பூசி வழங்கும் அரசின் திட்டத்தை முன்னிட்டு இந்த முடிவினை சுகாதாரத்துறை எடுத்திருப்பதாக WAM செய்தி நிறுவனம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

அபுதாபிக்கு வெளியே டிரைவ் த்ரூ மையங்களில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை அபுதாபி சுகாதார சேவை நிறுவனமான சேஹாவால் நிர்வகிக்கப்படும் எனவும் தேசிய அளவிலான இந்த சுகாதார மையங்களை 218 ஆக உயர்த்த இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்தை கவனத்தில் கொண்டு இந்த இலவச கொரோனா தடுப்பூசித் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் நோக்கோடு அமீரக சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு அமைச்சகத்துடன் இணைந்து இந்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.

vaccine trial
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap