UAE Tamil Web

போக்குவரத்து அபராதங்களுக்கு 35% தள்ளுபடி – அபுதாபி அறிவிப்பு..!

traffic fine discount scheme

சாலை விதிமுறைகளில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகையை விதிமீறல் நேர்ந்த நாளிலிருந்து 60 நாட்களுக்குள் செலுத்துபவர்களுக்கு 35 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என்று அபுதாபி காவல்துறை அறிவித்துள்ளது.

 இந்தத் திட்டம் மூலமாக, வாகன ஓட்டிகள் தங்கள் அபராதங்களை எளிதில் செலுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது என ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

- Advertisment -

இந்த அபராத தொகை தள்ளுபடியானது,  பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் மற்றும் தாமதமாக செலுத்தும் அபராதக் கட்டணங்களுக்கும் பொருந்தும்.

இந்த திட்டம் எப்போது முடியும் என அதிகாரிகள் இதுவரை குறிப்பிடவில்லை.

போக்குவரத்து அபராதத்தில் இந்த தள்ளுபடி சலுகையானது, கடந்த ஆண்டு முழுவதும் நடைமுறையில் இருந்தது, டிசம்பர் 22, 2020 அன்று முடிவடைந்தது.

தற்போது, வாகன ஓட்டிகள் www.adpolice.gov.ae மூலமாகவோ அல்லது AD போலீஸ் அப்ளிகேசன்  மூலமாகவோ போக்குவரத்து அபராதம் செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.