UAE Tamil Web

பிக் டிக்கெட்டில் 20 மில்லியன் திர்ஹம்ஸ் வென்ற இந்தியரைக் காணவில்லை – கையில் பணத்துடன் காத்திருக்கும் பிக் டிக்கெட் நிர்வாகம்..!

big ticket

அபுதாபி பிக் டிக்கெட்டில் இந்த வருடத்திற்கான முதல் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கும் குலுக்கல் நேற்று நடைபற்றது. இதில் 323601 என்ற எண் தேர்ந்தெடுக்கப்பட்டு அந்த டிக்கெட் எண்ணின் உரிமையாளரான அப்துஸ்ஸலாம் N.V வெற்றியாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனையடுத்து பரிசுத்தொகையை வழங்கும்பொருட்டு பிக் டிக்கெட் நிர்வாகம் அவரை அழைத்தபோதுதான் அந்த சிக்கல் எழுந்திருக்கிறது. அப்துஸ்ஸலாம் அளித்த இரண்டு தொடர்பு எண்களில் ஒன்று தவறானதாகவும் மற்றொன்று தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

அவருடைய எண்ணிற்கு தொடர்புகொள்ளும் போது மலையாளத்தில் கணினிக் குரல் ஒலிப்பதால் அவர் கேரளாவைச் சேர்ந்தவர் என நம்பப்படுகிறது.

தற்போது கையில் 20 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத் தொகையுடன் பிக் டிக்கெட் குழுவினர் மற்றும் சமூக உறுப்பினர்கள் அப்துஸ்ஸலாமைத் தேடிவருகின்றனர்.

big ticket
0 Shares
Share via
Copy link