UAE Tamil Web

3D வடிவில் அச்சிடப்பட்ட இதய மாடலை பயன்படுத்தி சிறுவனுக்கு நடந்த 11 மணி நேர சிக்கலான ஆப்பரேஷன்.! சாதித்த அமீரக மருத்துவர்கள் குழு..

child

அபுதாபியிலுள்ள ஷேக் கலீஃபா மெடிக்கல் சிட்டி (SKMC) மருத்துவர்கள், ஒரு ஜோர்டானிய குழந்தைக்கு 3டி தொழில்நுட்பத்தை கொண்டு அச்சிடப்பட்ட அதன் இதய மாதிரியை பயன்படுத்தி உயிர் காக்கும் அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்துள்ளனர்.

- Advertisment -

சிறுவன் ஆடம்(Adam) ஒரு சிக்கலான பிறவி இதய குறைபாட்டால் அவதிப்பட்டு வந்தான். இதனை அடுத்து ஆடமின் நிலையை துல்லியமாகக் கண்டறிந்து பொருத்தமான அறுவை சிகிச்சையை மேற்கொள்ள “லேட்டஸ்ட் இமேஜிங் டிவைசஸ்” மற்றும் 3 டி பிரிண்டிங் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, ஆதாமின் இதயத்தின் மாதிரியை மருத்துவ குழு உருவாக்கியது.

heart

இந்த மாதிரியை பயன்படுத்தி சுமார் 11 மணி நேரம் அக்குழந்தைக்கு சிக்கலான இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் மூலம் அச்சிறுவனின் இதயத்தில் இருந்த குறைபாடுகளான, ‘ வென்ட்ரிக்கிள்ஸ் மற்றும் ஏட்ரியா இடையே ஒரு தடை இல்லாமல் இருந்தது, அசாதாரண இன்ட்ராகார்டியாக் வால்வுகள் மற்றும் தவறான அறைகளிலிருந்து உருவாகியிருந்த பெரிய தமனிகள்’ உட்பட இதயத்தின் அனைத்து நிலைகளிலும் காணப்பட்ட குறைபாடுகள் சரி செய்யப்பட்டதாக SKMC வெளியிட்ட அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SKMC-யின் தலைமை நிர்வாக அதிகாரியான டாக்டர் டாக்டர் மரியம் பட்டி அல் மஸ்ரூய் இந்த அறுவை சிகிச்சை பற்றி கூறுகையில், சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணர்களின் குழுவால் உள்நாட்டில் இந்த இதய அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்ய முடிந்தது. இல்லையெனில் வெளிநாடுகளில் தான் இதை செய்ய வேண்டிய நிலை இருந்திருக்கும்.

இந்த சிக்கலான அறுவைசிகிச்சைக்கு முன், நன்கு புரிந்துகொள்ளும் பொருட்டு மருத்துவ குழு சிறுவன் ஆடமின் இதயத்தின் ஒரு மாதிரியை 3D அச்சிடும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, சிறுவனதுஇதயத்தின் உடற்கூறியல் மற்றும் ரத்த நாளங்களை உருவாக்கியது’என்றார்.

SKMC-யின் இருதய அறுவை சிகிச்சை நிபுணரும், இந்த ஆபரேஷனை மேற்கொண்ட முன்னணி அறுவைசிகிச்சை நிபுணருமான டாக்டர் லாஸ்லோ கிராலி, ‘அறுவை சிகிச்சைக்கு முன் சிறுவன் இதயத்தின் சரியான மாதிரியை பிரிண்ட் செய்தது 11 மணி நேர நடைமுறையின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணியாக இருந்தது. இதனால் அறுவை சிகிச்சையின் போது சிறுவனின் பாதுகாப்பிற்கு முழு உத்தரவாதம் கிடைத்தது என்றார்.

வெற்றிகரமான அறுவை சிகிச்சையை தொடர்ந்து, சிறுவன் ஆடமின் இதயம் ஒரு எக்ஸ்ட்ரா கோர்போரல் மெம்பிரேன் ஆக்ஸிஜனேற்ற சாதனத்துடன் இணைக்கப்பட்டது. நீண்ட மற்றும் சிக்கலான செயல்பாடுகளுக்குப் பிறகு இதயத்தை விடுவிக்கும் நோக்கத்துடன் செயற்கை ஆக்ஸிஜனேற்றத்தை அனுமதிக்க இது உடலில் இருந்து ரத்தத்தை ஈர்க்க உதவியது என்று கூறினார்.

ஏறக்குறைய 200 மணிநேரம் வேலை செய்த இந்த சாதனத்தின் உதவியுடன், ஆடம் தனது குடும்பத்தினருடன் மீண்டும் ஒன்றிணைந்துள்ளான்.